Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை அளிக்கும் ஆவண அடையாள எண்!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2010 (14:12 IST)
வருமான வரி செலுத்துவதற்கும், வருமான வரித்துறை அலுவலகத்தோடு தகவல் தொடர்பு கொள்ளவும் வருமான வரி செலுத்தும் ஒவ்வொருக்கும் ஒரு ஆவண அடையாள எண்ணை ( Document Identification Number - DIA) அளிக்கப்படும் என்று மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் அறிவித்துள்ளது.

இந்த நிதியாண்டிற்கான வருமான வரி செலுத்துவோர் இந்த எண்ணையும் குறிப்பிட்டே வருமான வரி விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று கூறிய நேரடி வரி விதிப்பு வாரியம், இந்த எண்ணை பெற வரி செலுத்துவோர் எதுவும் செய்ய வேணடாம் என்றும், வருமான வரித்துறையே தனது கணினியில் ஒரு எண்ணை உருவாக்கி ஒவ்வொருவருக்கும் வழங்கும் என்று கூறியுள்ளது.

வருமான வரி செலுத்துவோர் தற்போது தங்களுக்கென்று அளிக்கப்பட்டுள்ள தனித்த கணக்கு எண்ணை (பான்) குறிப்பிட்டு வரி விவரம் செலுத்த வேண்டிய நடைமுறை உள்ளது. இத்தோடு, டிஐஏ என்றழைக்கப்படும் இந்த ஆவண அடையாள எண்ணையும் குறிப்பிட்டாக வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை அனுப்பும் அறிவிக்கை, உத்தரவு, கடிதம் அல்லது தகவல் தொடர்பு என அனைத்திரும் இந்த எண் இருக்கும் என்று கூறியுள்ள வாரியம், “பிழையேதுமற்ற வருமான வரிக் கணக்கு பதிவு செய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதெ ன ”க கூறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

வேங்கைவயல் சம்பவம்.. இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவு! இதுதான் திராவிட மாடல்..? - பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்!

Show comments