Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவுப் பொருள் பணவீக்கம் 2% குறைந்தது!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2010 (13:49 IST)
தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்ததன் விளைவாக ஏற்பட்ட விவசாய உற்பத்திப் பெருக்கத்தின் காரணமான உணவுப் பொருட்களின் விலை கணிசமாக குறைந்துவருவதையடுத்து உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் நவம்பர் 6ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் மட்டும் 2 விழுக்காடு குறைந்துள்ளது.

அக்டோபர் 30ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் உணவுப் பொருட்களுக்கான ரூபாயின் பணவீக்கம் 12.3 விழுக்காடாக இருந்தது, நவம்பர் முதல் வாரத்தில் 2 விழுக்காடு குறைந்து 10.3 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்று அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின் இதே வாரத்தில் உணவுப் பொருள் பணவீக்கம் 13.99 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பருவமழை பரவலாக பெய்ததும், அதனையொட்டி பயிர்ச் சாகுபடி வட, மத்திய இந்திய மாநிலங்களில் விரிவாக நடந்ததில் தொடங்கி, தற்போது விவசாய உற்பத்தி சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளதாலேயே உணவுப் பொருள் விலைகள் குறைந்துவருவதாக அரசு தெரிவித்துள்ளது.

உணவுப் பொருள் பணவீக்கம் ஒரே வாரத்தில் 2 விழுக்காடு குறைந்துள்ளதால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இதுவரை கடைபிடித்துவந்த நெருக்கமாக நாணயக் கொள்கையை இந்திய மைய வங்கி தளர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

16 மாதங்களில் இல்லாத அளவிற்கு தொழில் உற்பத்தி 4.4 விழுக்காடாக குறைந்துள்ள நிலையில், இதற்கு மேலும் குறைந்த கால கடன்களின் மீதான வட்டி விகிதங்களை மைய வங்கி அதிகப்படுத்தாது என்று தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

Show comments