Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஸ்கோ ஒரிசாவை விட்டுப் போகாது: மாநில அமைச்சர்

Webdunia
புதன், 17 நவம்பர் 2010 (19:24 IST)
பசுமை விதிகளை மீறி தனது எஃகு உருக்காலைப் பணிகளை மேற்கொண்டதாக சுற்றுச் சூழல் அறிக்கை குற்றம்சாற்றியுள்ள நிலையிலும், தென் கொரியாவின் பாஸ்கோ நிறுவனம் ஒரிசாவை விட்டு்ப போகாது என்று அம்மாநில அமைச்சர் இரகுநாத் மோஹண்டி கூறியுள்ளார்.

ஒரிசாவின் பாரதீப் துறைமுகத்திற்கு அருகே ரூ.51,000 கோடி முதலீட்டில், ஆண்டிற்கு 12 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பெரிய உருக்காலையை நிறுவ பாஸ்கோ நிறுவனம் முயன்று வருகிறது. ஆனால், தனது தொழிற்சாலையை நிறுவுவதில் பசுமை சட்டங்கள் பலவற்றை பாஸ்கோ மீறியுள்ளது என்று மத்திய அரசு நியமித்துள்ள சுற்றுச் சூழல் குழு அறிக்கை அளித்துள்ளது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை முடிவெடுக்கவுள்ள நிலையில், ஒரிசா மாநில எஃகு மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் மோஹண்டி இவ்வாறு கூறியுள்ளார்.

“ஒரிசாவை விட்டு போகப்போவதாக அந்த நிறுவனம் எந்த விவரத்தையும் தரவில்லை. கர்நாடகத்தில் அவர்கள் மற்றொரு திட்டத்தை செயல்படுத்தலாம், ஆனால் அதற்காக அவர்கள் ஒரிசாவை விட்டுச் செல்லப்போகிறார்கள் என்று கூறிமுடியாத ு” என்று இரகுநாத் மோஹண்டி கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் ஆண்டிற்கு 6 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க அம்மாநில அரசுடன் பாஸ்கோ புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

Show comments