Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் விலை உயரும்

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2010 (12:50 IST)
கார் உற்பத்தி செய்ய தேவைப்படும் கச்சா பொருட்களின் விலை உயர்வு, வட்டி உயர்வு, உற்பத்தி வரி அதிகரிப்பு, பணவீக்கம் அதிகரிப்பு, புதிய மாசு கட்டுபாடு விதிகள், ஏற்றுமதி குறைந்து வருவது போன்ற காரணங்களால் கார் போன்ற வாகனங்களின் விலை 8 முதல் 10 விழுக்காடு வரை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று சொசைட்டி பார் இந்தியன் ஆட்டோமொபைல் அசோசிசன் கூறியுள்ளது.

இது குறித்து இந்தி ய வாகன உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பவான் கோயங்கா கூறுகையில், ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் (சொசைட்டி பார் இந்தியன் ஆட்டோமொபைல் அசோசிசன ்) பவன் கோயங்கா கூறுகையில், உருக்க ு, ரப்பர ், துத்தநாகம ், தாமிரம், ஈயம் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளது. கார்களின் விலையை உயர்த்தினால ், விற்பனை பாதிக்கப்படும்.

கடந்த இரண்டு வருடங்களாக வாகன விற்பனை 10 முதல் 14 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த நிதி ஆண்டிலும் விற்பனை அதிகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

வாகன விற்பன ை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்
நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதில் அரசு செலுத்தியுள்ள அக்கறை. அத்துடன் பட்ஜெட்டில ் அறிவிக்கப்பட்டுள்ள வரி சலுகைகளால் மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.

அத்துடன் இந்தியாவில் வாகனங்களின ் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், கார் விற்பனை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது என்று பவன ் கோயங்கா தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவம் போல் பொறியியல் படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு? முதல்வர் முயற்சி..!

ஓடிடி சினிமா, வெப் தொடர்களுக்கு சென்சார்? நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

இன்றிரவு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து.. வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்..!

ராகுல் காந்தியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: சபாநாயகருக்கு கடிதம் எழுதிய பா.ஜ.க. எம்.பி..!

Show comments