Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரியில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2010 (17:32 IST)
காவிர ி , அதன் கிளை ஆறுகளில் கழிவுகள் கலப்பதை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது என்று மத்திய சுற்றுச்சூழல்- வனத்துறை இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் நேற்று கனிமொழி எம்.பி கேட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது, காவிரி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதற்கு முன்பாக அவற்றை சுத்திகரிப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. கழிவுகளை சுத்திகரிப்பதற்கான ஆலை மற்றும் மறு சுழற்சி முறையிலான கழிவுகள் சுத்திகரிப்பு போன்ற வசதிகளை, தமிழ்நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் கொண்டுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட கழிவுகள் தோட்ட வேலைக்கும ், நீர்ப்பாசனத்திற்கும ், குளிர்ச்சிப்படுத்துவதற்கும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. அல்லது அவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த தர நிர்ணய அளவுகளில் உள்ளூர் நீர் நிலைகளில் விடப்படுகின்றன.

கர்நாடகாவில் காவிரி ஆறு தோன்றுகிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி கர்நாடகாவில் உள்ள எந்த ஒரு தொழிற்சாலையும் தனது கழிவுகளை காவிரி ஆற்றில் கலக்கவிடுவதில்லை என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம்.. உக்ரைன் தலைநகரில் தூதரகத்தை மூடிய அமெரிக்கா..!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பல எஜமானர்கள்: அன்புமணி கடும் விமர்சனம்..!

டீச்சர் கொலை.. வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு.. முதல்வர் ஸ்டாலின் வெட்கப்படனும்: அண்ணாமலை

நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

இன்றிரவு 15 மாவட்டங்களில் கனமழை.. சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட்.. வானிலை எச்சரிக்கை..!

Show comments