Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரெடிட் கார்டை பயன்படுத்த அடையாள அட்டை

Webdunia
திங்கள், 27 ஜூலை 2009 (12:35 IST)
பொருள்கள ் வாங்கி விட்டு அதற்கான பணத்தை கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் செலுத்துவதற்க ு, புகைப்படத்துடன் அடையாள அட்டை அவசியம் என வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.
இந்தியாவில் 5 கோடி கிரெடிட் கார்டுகளும ், 30 கோடி டெபிட் கார்டுகளும் புழக்கத்தில் உள்ளன. கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஒவ்வொரு மாதமும் சராசரியாக 2 ஆயிரம் மோசடிகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில ், பொருள்கள் வாங்கும் வர்த்தக நிறுவனங்களில் பான் கார்ட ு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற புகைப்படத்துடன் அடையாள அட்டை கேட்கப்படலாம் என, ஐசிஐசிஐ வங்கி, அதன் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மக்களவையிலும் கிரெடிட் கார்டு மோசடி பிரச்னை சென்ற பிப்ரவரியில் எழுந்தது. 2008 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 8 ஆயிரம் மோசடி சம்பவம் மூலம் ரூ.11 ஆயிரம் கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கிக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தெரிவித்துள்ளது.

ஹெச்.எஸ்.பி.ச ி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ ், சிட்டி வங்க ி, ஸ்டாண்டர்ட ் சார்ட்டர்ட் வங்க ி, டாயிஷ் வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் மூலமும் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது என மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மோசடியைத் தடுக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கோருதல ், கார்டு தொலைந்தால் பணம் எடுப்பதைத் தடுக்க உடனடி நடவடிக்கை உள்பட பல ஆலோசனைகளை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்ட முடியாத கடன்.. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் திவாலானது!

இனி ஆங்கிலம் மட்டும்தான் அமெரிக்காவின் மொழி! - ட்ரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

என் மகள் சாவுக்கு காங்கிரஸ் தான் காரணம்.. சூட்கேஸில் பிணமாக இருந்த பெண்ணின் தாய் பேட்டி..!

கச்சத்தீவு விவகாரம்.. தமிழக அரசு மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு..!

அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்பா? பிரேமல்தா விஜயகாந்த் தகவல்..!

Show comments