மஞ்சள் சாகுபடிக்கு மானியம்

Webdunia
வியாழன், 23 ஜூலை 2009 (15:29 IST)
தோட்டக்கலை இயக்கம் சார்பில், மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து திருப்பூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சந்தான கிருஷ்ணன ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.

நடப்பு ஆண்டில் மஞ்சள் சாகுபடி செய்துள்ள திருப்பூர ் வட்டார விவசாயிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் ஹெக்டேருக்கு ரூ. 11 ஆயிரத்த ு 250 மானியம் வழங்கப்பட உள்ளது. இம் மானியம ், அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்ப ோ பாக்டீரிய ா, இயற்கை உரம ், யூரிய ா, டிஏப ி, எம்ஓபி இடுபொருட்களாக வழங்கப்படும்.

தலா ஒரு விவசாயிக்கு அரை ஹெக்டேருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். இத ் திட்டத்தின் மூலம் பயன்பெ ற, மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அந்தந்த கிரா ம நிர்வாக அலுவலரிடம் சிட்ட ா, அடங்கல் மற்றும் நடப்பு பசலியில் மஞ்சள் சாகுபட ி செய்துள்ளதற்கான சான்று ஆகியவற்றுடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் திருப்பூர ் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மானியம் 30 விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதால் முதலில் வரும் விவசாயிகளுக்க ு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரளா சம்பவம்!.. இனிமே ஆம்பளங்க இப்டிதான் பஸ்ஸில் போகணும்!.. வைரல் வீடியோ!....

ரீல்ஸ் மோகத்தில் போன அப்பாவியின் உயிர்!.. வீடியோ வெளியிட்ட பெண் தலைமறைவு!...

வேலை பார்த்த பணத்தை தரவில்லை.. 700 கோடி ரூபாய் நிலுவைத்தொகை.. சென்னை மாநகராட்சி மீது குற்றச்சாட்டு..

என் மனைவியின் சாவுக்கு நான் தான் காரணம்.. ஆனால் அது கொலை அல்ல.. கணவன் வாக்குமூலம்

எடையை குறைக்க யுடியூப் பார்த்து வெங்காரம் சாப்பிட்ட கல்லூரி மாணவி பலி!.. மதுரையில் சோகம்!...

Show comments