Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பியட்- கிரான்டி பின்டா கார் அறிமுகம்

Webdunia
புதன், 17 ஜூன் 2009 (14:00 IST)
பியட் இந்தியா நிறுவனம் கிரான்டி பின்டா என்ற பெயரில் புதிய நவீன சொகுசு காரை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் அறிமுக விழாவில் பியட் இந்தியா தலைமை செயல் அதிகாரி ராஜுவ் கபூர் கூறுகையில், பின்புறம் சாய்ந்து கொள்வது மாதிரியான, நவீன சொகுசு கார் விரும்புபவர்களுக்காக, கிரான்டி பின்டா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்படும் பாகங்களை டிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவையாக 85 விழுக்காடாக அதிகரித்து விடுவோம். இதை அறிமுகப்படுத்தி இருப்பதன் மூலம், இத்தாலியில் வடிவமைக்கப்பட்ட காரை, இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளோம். சிறிய ரக காரின் தேவை முழுவதுமாக நிறைவு செய்யப்பட வில்லை. வாடிக்கையாளர்கள் சர்வதேச பிரான்ட் கார்களை விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.

இத்தாலியைச் சேர்ந்த பியட் கார் தொழிற்சாலை பூனா அருகில் ரஞ்சன்காகனில் உள்ளது. இதன் கார்கள் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இந்த ரக கார்களை 2005 ஆம் ஆண்டில் பியட் நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய கார் பெட்ரோல், டீசலில் இயங்கும் வகையில் கிடைக்கிறது.

இதே மாதிரியான காரை ஹுன்டாய் ஐ.20, மாருதி ரிட்ஜ், ஸ்கோடா ப்பா, ஹோன்டா ஜாக் என்ற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆவடி - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புதிய மின்சார ரயில்.. தேதி அறிவிப்பு..!

வேகமாக பரவி வரும் மெட்ராஸ் ஐ.. விழிப்புணர்வு தேவை என கூறும் மருத்துவர்கள்..!

US Presidential Election: வெற்றியை தீர்மானிக்க போகும் 7 மாகாணங்கள்! ட்ரம்ப் செய்த ட்ரிக் வேலை செய்யுமா?

திமுக குடும்ப ஆட்சியை எம்ஜிஆர் அகற்றியதை போல.. விஜய்யும் அகற்றுவார்! - தவெக செய்தி தொடர்பாளர்!

தமிழகத்தில் நவம்பர் 10ஆம் தேதி வரை மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Show comments