Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகளில் திரும்பி வராத கடன் அதிகரிக்கும்

Webdunia
வெள்ளி, 29 மே 2009 (15:43 IST)
பொருளாதார நெருக்கடி காரணமாக, வங்கிகள் வழங்கியுள்ள சில்லரை கடன்களில் திரும்பி வராத கடன்கள் அதிகரிக்கும் என்று கேர் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

வங்கிகள் கடந்த இரண்டு வருடங்களில் அதிக அளவு வாகன கடன், நுகர்வோர் கடன். தனிநபர் கடன் போன்ற கடன்களை அதிக அளவு கொடுத்துள்ளன. இந்தவகை கடன்கள், சில்லரை கடன்கள் (ரிடெய்ல ்-retail ) என்று அழைக்கப்படுகின்றன.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக, 2009-10 நிதி ஆண்டில் வங்கிகள் வழங்கியுள்ள சில்லரை கடன்களில், திரும்பி வராத கடன்களின் அளவு அதிகரிக்கும் என்று கேர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் துணை மேலாண்மை இயக்குநர் டி.ஆர்.டோக்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில், வேலை வாய்ப்பு குறைந்து வருதல், கடனுக்கு ஈடான பொருட்களின் மதிப்பு குறைவது ஆகிய காரணங்களால் வங்கிகளின் திரும்பி வராத சில்லரை அளவு அதிகரிக்கும். அதிலும் கடந்த ஒன்று, இரணடு வருடமாக கொடுத்த கடனில், அதிக அளவு திரும்பி வராத கடனாக மாறும்.

ஏற்றுமதி சார்ந்த சிறு, நடுத்தர தொழில் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இரு சக்கர வாகன கடன், மற்ற வாகன கடன் திரும்பி வராத அதிகமாக இருக்கும். இதே போல் வீட்டு வசதி கடனிலும் திரும்பி வராத கடன் அதிகரிக்கும்.

இந்த நிதி ஆண்டில் வங்கிகளின் திரும்பி வராத கடன் அளவு 3.7 விழுக்காடாக உயரும். (சென்ற நிதி ஆண்டில் திரும்பி வராத கடன் அளவு 3% ஆக இருந்தது) என்று டோக்ரா தெரிவித்தார்.

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

Show comments