Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்களுக்கு உதவும் "டாட்' கருவி

Webdunia
செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (12:27 IST)
மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ஆபத்து ஏற்பட்டால், கரையில் உள்ள தை கடலோரக் காவல் படைக்கு தெரிவிக்கும் வகையில் "டாட ்' என்ற புதிய கருவி விசைப் படகு மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கருவியை "இஸ்ர ோ' விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதில் 5 பொத்தான்கள் உள்ளன. மீனவர்கள் ஆபத்து ஏற்பட்டால், இதில் உள்ள 1 வது பொத்தானை அழுத்தினால் கருவி இயங்க தொடங்கும். பிறகு தீ விபத்தைத் தெரிவிக்க 2 வது பொத்தான ், மருத்துவ உதவித் தேவைப்பட்டால் 3 வது பொத்தான ், படகு மூழ்குவதைத் தெரிவிக்க 4 வது பொத்தான ், கடலுக்குள் தவறி விழும்பட்சத்தில் 5 வது பொத்தான் என சூழ்நிலைக்கேற்றவாறு பொத்தானை அழுத்தினால ், கடலோரக் காவல் படையினர் உண்மைநிலையை அறிந்து அதற்கேற்ப பாதுகாப்ப ு, மீட்பு நடவடிக்கைகளை எடுப்பர்.

இந்த கருவியின் எடை சுமார் 4 கிலோ. இது 6 வோல்ட் ஆயுள்கால பேட்டரியில் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியின் விலை ரூ. 20 ஆயிரம்.

இந்த கருவி நாகப்பட்டினம ், புதுக்கோட்ட ை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில ், 65 விசைப் படகு மீனவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

இதுகுறித்து ஜகதாப்பட்டினம் விசைப் படகு மீனவர்கள் சங்கத் தலைவர் ஜி. ராமகிருஷணன் கூறுகையில், கடலுக்குள் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து இந்தக் கருவியின் மூலம் உடனே தகவல் தெரிவித்து உதவியைப் பெறமுடியும் என கடலோர காவல் படையினரும ், மீன்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கருவியை உபயோகித்த பிறகுதான் முழுப்பயனும் தெரிய வரும் என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

Show comments