Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் மாவட்ட தொழில் வளர்ச்சி கலந்துரையாடல்

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (15:24 IST)
தென்மாவட்ட தொழில் வளர்ச்சிக்காக மதுரையில் வரும் 7 ஆம் தேதி உயர்நிலைக் குழு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதா க, வேலம்மாள் கல்வி அறக்கட்டளைத் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் தெரிவித்தார்.

இது பற்றி நேற்று அவர் கூறுகையில், தென் தமிழகத்தில் தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வழிகாட்டவும ், வெற்றி பெற்ற நிறுவனங்கள் ஒன்றுகூடி கலந்தாலோசனை செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பிப்.7 ஆம் தேதி உயர்நிலைக் குழு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பசுமலையில் உள்ள தாஜ் கார்டன் ரிட்ரீட் ஹோட்டலில் நடைபெறும். இதில் சிப்காட் தலைவர் டாக்டர் என்.கோவிந்தன ், டிட்கோ தலைவர் ஏ.இராமசுந்தரம ், சிட்கோ தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தொழில் அதிபர்கள்- தொழில்முனைவோர் இடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துதல ், சிவகங்கை மாவட்டத்தில் கிராஃபைட் தொழிற்சாலை தொடங்குதல ், உலகத் தரம் வாய்ந்த ஐ.ஐ.எம ், ஐ.ஐ.டி போன்று நிறுவனங்களைக் கூட்டு முயற்சியில் தொடங்குதல ், மத்திய அரசின் பல்கலைக்கழகங்களைத் தென் மாவட்டங்களில் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளுதல் உள்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

Show comments