ரூபாய் மதிப்பு 20 பைசா சரிவு

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2009 (14:00 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 பைசா சரிந்தது.


இன்று காலையில் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் சரிந்தன. ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. இதனால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்யும் என்பதால், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது. அத்துடன் மற்ற அந்நியச் செலவாணிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்ததால், இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.49.076 ஆக அதிகரித்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 20 பைசா உயர்வு.

வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.48.87-48.88.

இன்று வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.49.00 முதல் ரூ.49.12 என்ற அளவில் இருந்தது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி!..

வேட்புமனு தாக்கல் செய்யாத 2 தவெக வேட்பாளர்கள்!. பின்னணி என்ன?...

நாளையும் விஜய் சென்னை பிரச்சாரம் ரத்து!. இதுக்கு இல்லையா ஒரு எண்டு!..

சாத்தான்குளம் வழக்கு!. மேல்முறையீடு செய்தால் தீர்ப்பு மாறுமா?.. வழக்கறிஞர்கள் சொல்வது என்ன?..

சாத்தான்குளம் கொலை வழக்கு!.. 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை!. நீதிபதி அதிரடி தீர்ப்பு..

Show comments