Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணிகவரி தீர்வு திட்டம் காலக்கெடு நீட்டிப்பு

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2009 (12:04 IST)
வணிக வரி நிலுவைகளைத் தீர்க் க ஒரே முறைத் தீர்வுத் திட்டத்திற்கு காலக்கெடு நீடித்துள்ளதை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வரவேற்றுள்ளது.

இந்த சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 01.04.2002 ஆம் தேதிக்கு முற்பட்ட விற்பனை வரி உள்ளிட்ட பல்வேறு நிலுவைகளைத் தீர்த்திடும் நோக்குடன் "ஒரே முறைத் தீர்வுத் திட்டம ்' தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய காலகெடு 31.01.2009 என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சிறப்பான திட்டம் குறித்த தகவல் தொழில ், வணிகத் துறையினருக்கு முழுமையாகச் சென்றடையவில்லை. இதனால் இந்த காலக்கெடுவை இரண்டு மாதம் நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இக் கோரிக்கையை வணிக வரித் துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா ஏற்ற ு, விண்ணப்பம் அளிப்பதற்கான காலக்கெடுவை 31.03.2009 வரை நீட்டித்துள்ளார்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் அமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

Show comments