Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மானியத்தில் கால்நடை காப்பீடு

Webdunia
சனி, 31 ஜனவரி 2009 (15:21 IST)
மத்திய அரசின் உதவியுடன் கால்நடைகளுக்கு காப்பீடு செய்யும் திட்டம் செயல்படுத்த, தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிதி ஆண்டில் தமிழகத்தில் மத்திய அரசின் கால்நடை காப்பீடு திட்டம் திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய ஐந்து மாவட்டங்களில் அமல்படுத்தப்படும். இந்த மாவட்டங்களில் சோதனை ரீதியாக கால்நடை காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன் சாதக, பாதங்களை பொருத்து மற்ற மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்படும்.

இந்த திட்டத்தின் படி கால்நடைகளை காப்பீடு செய்வதற்கு, செலுத்தும் தொகையில் குறிப்பிட்ட விழுக்காடு மத்திய அரசு மானியமாக வழங்கும்.

இந்த திட்டத்தின் படி திருச்சி மாவட்டத்தில் மட்டும் 44 ஆயிரத்திற்கும் அதிகமான பசு,எருமைக்கு காப்பீடு செய்யப்படும்.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 20 ஆயிரம் கால்நடைகள் இருப்பாதக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 60 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரை பசு பால் கொடுக்கும் கால்நடைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மானிய திட்டத்தின் படி, விவசாயிகள் இரண்டு பால் கொடுக்கும் பசு அல்லது எருமையை காப்பீடு செய்து கொள்ளலாம். இவை தினசரி குறைந்தபட்சம் 4.5 லிட்டர் பால் கொடுக்க வேண்டும். கால்நடைகளை வளர்ப்பவர்கள் காப்பீடு செய்ய செலுத்தும் தொகையில் பாதி மட்டும் செலுத்தினால் போதும். மீதம் உள்ள பாதி தொகையை மத்திய அரசு வழங்கும்.

பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள், காப்பீடு செய்யும். காப்பீடு தொகைக்கு, மானியம் வழங்குவதற்காக, காப்பீடு நிறுவனங்களுக்காக மத்திய அரசு ரூ.20 லட்சம் ஒதுக்கியுள்ளது.

கால்நடைகளின் சந்தை மதிப்பை பொறுத்து, காப்பீடு தொகை மாறுபடும். இதன் ஒரு வருட காப்பீடு தொகையாக, அதன் சந்தை மதிப்பின் 2.50 விழுக்காடாக இருக்கும். மூன்று வருட காப்பீடுக்கு சந்தா தொகை 5 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக காப்பீடு செய்யும் பசுவின் சந்தை மதிப்பு ரூ.10 ஆயிரம் என்றால், காப்பீடு தொகை ரூ.125. மூன்று வருட காப்பீடு தொகை ரூ.250. கால்நடை இறக்க நேரிட்டால் உடனடியாக காப்பீடு தொகை வழங்கப்படும்.

இதன் மற்றொரு சிறப்பம்சம், ஒவ்வொரு கால்நடைக்கும் தனித்தனியாக காப்பீடு செய்யப்படும். தற்போதைய சொந்தக்காரர் கால்நடையை விற்பனை செய்தால், புதிதாக காப்பீடு செய்து கொள்ள வேண்டிய தேவை இல்லை. உரிமையாளர் பெயரை மட்டும் மாற்றிக் கொண்டால் போதுமானது. இந்த காப்பீடு திட்டத்தின் கீழ், பால் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களின், எல்லா கால்நடைகளுக்கும் காப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments