Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு 15 பைசா சரிவு

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (12:57 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா சரிந்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் தொடர்ந்து நான்கு நாட்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வந்த, ரூபாயின் மதிப்பு இன்று குறைந்தது.

இன்று காலையில் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் சரிந்தன. ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. இதனால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்யும். இவைகளுக்கு டாலர் தேவைப்படும் என்பதால் வங்கிகள் அதிக அளவு டாலரை வாங்கின. குறிப்பாக பொதுத்துறை வங்கிகளும் டாலரை வாங்கியதால், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.49.12 ஆக அதிகரித்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 15 பைசா உயர்வு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.97-48.98.

இன்று வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.49.07 முதல் ரூ.49.12 என்ற அளவில் இருந்தது.

ரிசர்வ் வங்க ி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலர் மதிப்பு ரூ.49.02 பைசா
1 யூர ோ மதிப்பு ரூ.63.25
100 யென ் மதிப்பு ரூ.54.83
1 பவுன்ட் ஸ்டெர்லிங ் ரூ.69.83.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

Show comments