Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோதுமை கொள்முதல் விலை அதிகரிப்பு

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (15:28 IST)
மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு, கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலையை குவின்டாலுக்கு ரூ.80 அதிகரிக்க ஒப்புதழ் அளித்துள்ளது.

புது டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ரபி பருவத்திற்கு கோதுமை உட்பட பல்வேறு தானியங்களின் ஆதார விலையை அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தின் முடிவு குறித்து உயர் அதிகாரி கூறுகையில், தற்போது கோதுமைக்கு குறைந்த பட்ச ஆதார விலை குவின்டாலுக்கு ரூ.ஆயிரம் ஆக உள்ளது. இதை குவின்டாலுக்கு ரூ.1,080 ஆக அதிகரிக்கப்படும்.

இதே போல் பார்லியின் விலை குவின்டாலுக்கு ரூ.35 உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு பார்லிக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவின்டாலுக்கு ரூ. 645 வழங்கப்பட்டது. தற்போது ரூ.35 அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி பார்லிக்கு குவின்டாலுக்கு ரூ.680 வழங்கப்படும்.

அதே போல் சிறு தானியங்களின் குறைந்த பட்ச ஆதார விலை குவின்டாலுக்கு ரூ.130 உயர்த்தப்பட்டுள்ளது. இவைகளுக்கு முன்பு ரூ.1,700 வழங்கப்பட்டது. இனி சிறு தானியங்களுக்கு ரூ.1,730 வழங்கப்படும்.

துவரைக்கு குவின்டாலுக்கு ரூ. 170 உயர்த்தப்பட்டுள்ளது. இனி ரூ.1,870 வழங்கப்படும்.

எண்ணெய் கடுகு விலை குவின்டாலுக்கு ரூ.30 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இனி குவின்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.1,650 வழங்கப்படும்.

அதே நேரத்தில் சாப்ளவர் எண்ணெய் விதையின் விலை உயத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

Show comments