Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பூரில் புத்தகக் கண்காட்சி

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (17:53 IST)
திருப்பூரில் வருகின்ற 30 ஆம் தேதி முதல் புத்தக கண்காட்சி தொடங்குகிறது.

இந்த கண்காட்சியை பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகியவை இணைந்து திருப்பூர் டவுன் ஹால் மைதானத்தில் நடத்துகின்றன.

இந்த கண்காட்சி குறித்து பின்னல் புக் டிரஸ்ட் பொருளாளர் ஏ.நிஷார்அகமத் நேற்று கூறுகையில், புத்தக கண்காட்சியை இதை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கண்காட்சியைத் திறந்து வைக்கிறார்.

இது பிப்ரவரி 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பள்ள ி, கல்லூரி மாணவர்களிடம் ஒரு லட்சம் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டை கொண்டு வரும் மாணவர்களில் குலுக்கல் முறையில் 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.500 வீதம் ரூ. ஐந்தாயிரம் மதிப்புள்ள புத்தகங்கங்கள் இலவசமாக வழங்கப்படும்.

அத்துடன் தினமும் மாலை 5 முதல் 6 மணி வரை கண்காட்சி அரங்கில் குறும்படங்களும் திரையிடப்பட உள்ளது. நாள்தோறும் சிறப்பு சொற்பொழிவுகள் நடக்க உள்ளது என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments