Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிர் காப்பீடு கணக்கிடும் முறை

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (15:37 IST)
பயிர் காப்பீட ு எப்படி கணக்கிடப்படுகிறது என்பது பற்றி விளக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டம் த்தில் வருவாய் அலுவலர் எஸ். மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் பயிர் காப்பீடு கணக்கிடும் முறை பற்றி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தங்கவேலு கூறுகையில்,

பயிர் காப்பீட்டை கணக்கிடுவதற்கு மாவட்டத்தில் உள்ள 38 பிர்காக்களில் ஒரு பிர்காவுக்கு 5 கிராமங்கள் வீதம் தேர்வு செய்யப்படுகின்றன. அதில் ஒவ்வொரு கிராமங்களிலும் தலா 2 வயல்களில் அறுவடைசெய்த ு, அதன் விவரம் புள்ளியியல் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.

விவசாயிகளும் வேளாண்மைத் துறை அலுவலர்களைத் தொடர்பு கொண்ட ு, தங்கள் கிராமத்தில் அறுவடை செய்யப்படும் விவரம ், மகசூல் பெறப்படும் விவரம் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

மிளகாய் பயிரை மார்ச் மாதம் 15 ஆம் தேதி வரை காப்பீடு செய்யலாம் என்ற ு, தோட்டக் கலைத் துறை அதிகாரி தெரிவித்தார்.

நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து 16 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகள் நெல் விற்பனை செய்து பயனடையலாம்.

விவசாயிகளுக்கு வழங்குவதற்கா க, வட்டாரத்துக்கு 50 கைத்தெளிப்பான்கள் வீதம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வேளாண்மைத் துறை துணை இயக்குநர் பழனிச்சாமி தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments