Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முட்டை ஏற்றுமதி கடனில் வேண்டாம்: என்இசிசி

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2009 (15:15 IST)
முட்டையை ஏற்றுமதி செய்யும் போது கடனுக்கு வழங்க வேண்டாம் என நாமக்கல் மண்டல கோழிப் பண்ணையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) தலைவர் டாக்டர் பி.செல்வராஜ் விடுத்துள்ள அறிக்கையில், நாமக்கல் மண்டலத்தில் இருந்து ஏற்றுமதிக்காக முட்டைகளை வழங்கிய பண்ணையாளர்களுக்கு வரவேண்டிய நிலுவை தொகை ரூ.5 கோடிக்கும் அதிகமாக உள்ளது.

ஏற்றுமதிக்காக முட்டைகளை வழங்கும் பண்ணையாளர்கள் மிகுந்த கவனத்துடன் வழங்க வேண்டும். தமிழகம் மற்றும் கேரளத்தில் ஐயப்பன் சீசன் முடிந்துள்ளதாலும ், பொங்கல் பண்டிகை முடிந்துள்ளதாலும் முட்டை விற்பனை ஓரளவு அதிகரித்துள்ளது. முட்டைக்கான தேவையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் இருந்து இரு மாநிலங்களுக்கும் முட்டைகள் அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மும்ப ை, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களுக்கும் முட்டைகள் அனுப்பப்படுகின்றன. இதனால ், முட்டை விலையும் உயர்ந்து வருகிறது.

ஆப்கானிஸ்தான ், ஈரான ், துர்கிஸ்தான ், கஜகஸ்தான ், தென் ஆப்பிரிக்கா,அங்கோல ா, லைபீரியா ஆகிய நாடுகளுக்கு முட்டைகள் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 1544.49 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் உயரும். இதனால ், ஏற்றுமதி முட்டைகளை கடனுக்கு வழங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments