Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமராவதி அணை திறப்பு

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (11:46 IST)
அமராவதி அணையில் இருந்து, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் இறுதிச் சுற்று தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. .

அமராவதி அணையின் மூலம் கோவ ை, ஈரோடு மற்றும் கரூர் வரையிலான பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் பழைய ஆயக்கட்டு பகுதியில் மட்டும் சுமார் 29,500 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு பகுதியில் சுமார் 25,500 ஏக்கரும் உள்ளன. அத்துடன் கரூர் வரையிலான நூற்றுக்கணக்கான கிராமங்களும் குடிநீர் பெற்று வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய அளவில் பருவமழை பெய்து வருவதால் பாசனத்திற்கு தேவையான அளவு அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் இரண்டாவது வாரம் முதல் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இந்நிலையில் கோவ ை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு 7வது சுற்றுத் தண்ணீர் (இறுதிச் சுற்று) வியாழக்கிழமை காலை திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 440 கனஅடி வீதம் பிரதான கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,
ஜன. 30 ஆம் தேதி வரை தண்ணீர் விடப்படும். பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு அமராவதி ஆற்றில் விநாடிக்கு 800 கன அடி போய்க் கொண்டிருக்கிறது. இது மார்ச் 31 ஆம் தேதி வரை திறந்து விட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதில் கல்லாபுரம் வாய்க்காலில் விநாடிக்கு 25 கனஅடி தண்ணீரும ், ராமகுளம் வாய்க்காலில் விநாடிக்கு 25 கனஅடி தண்ணீரும் சென்று கொண்டிருக்கிறது. அணையில் போதுமான தண்ணீர் இருப்பதால் பிரச்னை இல்லை என்று தெரிவித்தனர்.

அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி. மொத்த கொள்ளளவு 4,032 மில்லியன் கனஅடி. வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 74.29 அடியாக இருந்தது.

இந்த அணைக்கு விநாடிக்கு 117 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,290 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments