Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊனமுற்றோருக்கு சுயதொழில் தொடங்க கடனுதவி

Webdunia
செவ்வாய், 20 ஜனவரி 2009 (15:06 IST)
சுய தொழில் தொடங்க கடனுதவி பெற உடல் ஊனமுற்றவர்கள் விண்ணப்பிக்கலாம ் என்று மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் 18 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்ட உடல் ஊனமுற்றவர்கள் சிறு தொழில் தொடங்க கடன் வழங்குகிறது. கடைகள ், பணிமனைகள ், சுகாதார மையம ், அழகுநிலையம ், கம்ப்யூட்டர் மையம ், இயந்திரங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரித்தல ், விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடங்க அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் வரை வரை கடன் வழங்கப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிப்பவர்களின் கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.75 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

நகர்ப்புறங்களில் வசிப்பவர்களும் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு மையத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 225 8986 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments