Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிச்சந்தை கோதுமை விற்பனை அளவு அதிகரிப்பு

Webdunia
செவ்வாய், 20 ஜனவரி 2009 (14:10 IST)
மத்திய அரசு மாவு மில் ஆலைகள், வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யும் கோதுமை அளவை அதிகரித்துள்ளது.

மத்திய அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்கிறது. இதனை ரேஷன் கடைகள் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மானிய விலையில் விற்பனை செய்கிறது. அவசர கால இருப்பிற்கு போக உபரியாக உள்ள கோதுமையை வெளிச் சந்தையில் விற்பனை செய்கிறது.

இதன் படி மாவு ஆலைகள், மொத்த வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யும் கோதுமையின் அளவை 27.500 டன் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. முன்பு 9.72 லட்சம் டன் மட்டுமே விற்பனை செய்வது என முடிவு செய்திருந்தது.

இந்த கோதுமையை மத்திய அரசு சார்பின் இந்திய உணவு கழகம் பகிரங்க விலைப்புள்ள ி ( டெண்டர்) சென்ற வருடம் செப்டம்பர் மாதம் முதல் விற்பனை செய்து வருகிறது. இதற்கு வர்த்தகர்கள், மாவு மில்களிடம் அதிக வரவேற்பு இருப்பதுடன், அதிக எண்ணிக்கையில் விலைப்புள்ளிகளும் வந்துள்ளன.

இதன்படி டில்லி மாநிலத்திறக்கு கூடுதலாக 1 லட்சம் டன், தமிழகத்திற்கு 30 ஆயிரம் டன், கர்நாடாகவுக்கு 25 ஆயிரம் டன், அஸ்ஸாமிற்கு 20 ஆயிரம் டன், ஹரியானா, பஞ்சாப், ஒரிசா ஆகிய மாநிலங்களுக்கு தலா 10 ஆயிரம் டன் விற்பனைக்கு ஒதுக்கப்படும்.

அதே நேரத்தில் மாகராஷ்டிரா மாநிலத்திற்கான ஒதுக்கீடு 45 ஆயிரம் டன், மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களின் ஒதுக்கீடு தலா 30 ஆயிரம் டன், ஹிமாசல பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கான ஒதுக்கீடு தலா 20 ஆயிரம் டன் குறைக்கப்படும்.

தற்போது கூடுதலாக விற்பனைக்கு ஒதுக்கப்பட்டுள்ள கோதுமை, இந்திய உணவு கழகம், பகிரங்க விலைப்புள்ளி மூலம் வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments