Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌வி‌லை அ‌திக‌ரி‌த்த உணவு பொரு‌ட்க‌ளி‌ன் உ‌ற்ப‌த்‌தியை உய‌ர்‌த்த நடவடி‌க்கை: அமை‌ச்ச‌ர் எ.வ.வேலு

Webdunia
திங்கள், 19 ஜனவரி 2009 (18:28 IST)
கட‌‌ந்தா‌ண்ட ு கணிசமாக ‌வில ை அதிகரித்த ஒரு சில உணவுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான திட்டங்களை வகுத்து இவைகளின் உற்பத்தியை கணிசமாக உயர்த்த வேளாண் துறை தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளது எ‌ன்று அமை‌ச்ச‌ர ் எ.வ. வேல ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை உறுதி ச ெ‌‌ ய்யவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், உணவு அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அமைக்கப்பட்ட விலைவாசி கண்காணிப்பு குழுவின் முதல் கூட்டம் செ‌ன்ன ை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

TN.Gov.TNG
கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற ்‌ றி ய அமை‌ச்ச‌ர ் வேல ு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி ஏழை எளிய மக்களை பாதுகாக்கும் வகையில் முதலமை‌ச்ச‌ர ் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். ஒரு ரூப ா‌ ய்க்கு 1 கிலோ அரிசி திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம், மானியவிலை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அரிசி, கோதுமை மற்றும் பருப்பு வகைகள் போன்றவைகளை இருப்பு வைத்துக் கொள்வதற்கு மொத்த மற்றும் சில்லறை வணிகர்களுக்கும், அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் உச்சவரம்பு நிர்ணயம் ச ெ‌ ய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.

டீசல் மீதான விற்பனை வரியை 2 சதவீதம் குறைக்கப்பட்டது. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தமிழகத்தில் விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது. குறிப்பாக பாமாயில் ஒரு கிலோ 58 ரூபா‌ய ் வெளிச்சந்தையில் விற்கப்பட்டபோது, சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் நியாயவிலைக் கடைகளில் ரூ.40க்கு விற்கப்பட்டது.

இதன் விளைவாக வெளிச்சந்தை விலை குறைந்து கொண்டே வந்ததனால் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் நியாயவிலைக் கடைகளில் ரூ.40க்கு விற்கப்பட்டுவந்த பாமாயில் ரூ.35ஆகக் குறைக்கப்பட்டது. வெளிச்சந்தையில் பாமாயில் விலை குறைந்துள்ளதால் மீண்டும் தற்போது ரூ.30ஆகக் குறைக்கப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், செப்டம்பர் மாத விலையுடன் ஒப்பிடுகையில் கோதுமை (0.98%), உளுத்தம் பருப்பு (1.01%), கடலைப் பருப்ப ு (6.20%), தனியா(6.72%), தேங்க ா‌ ய ் எண்ண ெ‌‌ ய ் (0.43%), கடல ை எ‌ண்ணெ‌ய ் (7.17%), சூரியகாந்தி எண்ண ெ‌ ய ் (3.70%), பாமாயில் (33.46%), தக்காளி(4.01%) விலை குறைந்துள்ளது.

5.01.2009 முதல் சரக்குந்து வேலைநிறுத்தம் காரணமாக க ா‌ ய்கறிகளின் விலை சற்று உயர்ந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை உள்ளூர் க ா‌ ய்கறிகள் சந்தைக்கு வருவதில் அதிக தடை ஏதும் இல்லாததால் அவற்றின் விலையில் அதிக மாற்றமின்றி இருந்தது. கத்தரிக்க ா‌ ய், வெண்டைக்க ா‌ ய், பாகற்க ா‌ ய், வாழைக்க ா‌ ய், தக்காளி போன்றவற்றின் விலைகள் குறைந்துள்ளன. உருளைக்கிழங்கு உத்தரப்பிரதேசம ், மத்தியப் பிரதேசத்திலிருந்து வரத் தொடங்கியுள்ளதால் அவற்றின் மொத்த விலை குறைந்துள்ளது.

12.01.2009 முதல் சரக்குந்துகளின் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளதால், க ா‌ ய்கறிகளின் விலை கணிசமாக குறைய வ ா‌ ய்ப்புள்ளது என்பதாலும், புதிய நெல் அறுவடை காரணமாக விரைவில் அரிசி ரகங்களின் விலையும் குறையத் தொடங்கும். பெட்ரோல், டீசல் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதால், சரக்கு போக்குவரத்து கட்டணம் குறைந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை வரும் மாதங்களில் கணிசமாக குறைய வ ா‌ ய்ப்புள்ளது. எனவே, ஜனவரி 2009-ன் விலைவாசி நிலவரத்தினை ஆ‌ ய்வு ச ெ‌ ய்து மேல் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தெரிவித்தார்கள்.

விலைவாசி கடந்த ஆண்டு கணிசமாக அதிகரித்த ஒரு சில உணவுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான திட்டங்களை வகுத்து இவைகளின் உற்பத்தியை கணிசமாக உயர்த்த வேளாண் துறை தேவையான நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த ஆ‌ ய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் க.சண்முகம், உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணைய‌ர் க.இராஜாராமன், நிதித்துறை சிறப்பு செயலாளர் பிரவீன் குமார், வேளாண்மைத்துறை செயலாளர் கே.நந்தகிஷோர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜதீந்த்ரநாத் ஸ்வைன், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக‌த்துறை இய‌க்குன‌ர் அதுல் ஆனந்த், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை த‌னி அலுவல‌ர் எம்.சுசிலா, பொது மேலாளர், இந்திய உணவுக் கழக‌த்‌தி‌ன் பொது மேலாள‌ர் தி.ஜெயகுமார், தன்னார்வ நுகர்வோர் அமைப்பு உறுப்பினர்கள் டி.ஏ. பிரபாகர், ரமணி, தாமஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments