Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலர் ஏல மையத்தால் பலன் இல்லை - அமைச்சர்

Webdunia
திங்கள், 19 ஜனவரி 2009 (13:43 IST)
உதகை : உதகையில் கொய்மலர் சாகுபடியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட மலர் ஏல மையம், எதிர்பார்த்தபடி மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரிய பலனை அளிக்கவில்லை என தமிழக கதர் வாரியத்துறை அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரன் கூறினார்.

உதகை ரோஜா பூங்காவில் 27 வது அகில இந்திய ரோஜா சங்க கூட்டம் மற்றும் சர்வதேச ரோஜா மாநாட்டை சனிக்கிழமை தமிழக கதர் வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.

அவர் விழாவில் உரையாற்றுகையில், உதகையில் கடந்த 1996 ஆம் ஆண்டு, 1,919 ரகங்களோடு உருவாக்கப்பட்ட ரோஜா பூங்காவில், தற்போது தோட்டக்கலைத் துறையினரின் தீவிர நடவடிகைகளால் 3,800 ரகங்களாக அதிகரித்துள்ளது.

உதகை ரோஜா பூங்கா, உலகின் மிகச்சிறந்த ரோஜா பூங்காக்களுள் ஒன்றென்பதற்கான கார்டன் ஆப் எக்சலென்ஸ் விருதும ், கிழக்கு ஆசியாவிலேயே சிறந்த ரோஜா பூங்கா என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

தென்னிந்தியாவில் மலர் சாகுபடியில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது. இதனால் தான் தமிழகம் நாட்டின் மலர்க்கூடை என அழைக்கப்படுகிறது.

தமிழக அரசும ், தோட்டக்கலைத் துறையும் மலர் சாகுபடியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றன.

இந்தியாவில் கிரசாந்திமம் மற்றும் காரனேசன் மலர்களைவிட ரோஜா மலரே சந்தையில் 32 சத விற்பனையை பிடித்து முதலிடத்தில் உள்ளது. உலக அளவிலும், உள்நாட்டிலும் மலர் வர்த்தகத்தில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. உலக சந்தையில் 17 விழுக்காடு, உள்நாட்டு சந்தையில் 25 விழுக்காடும் கொய்மலர் வர்த்தகத்தில் உயர்வு காணப்பட்டுள்ளது.

உலக சந்தையில் சுமார் 50 பில்லியன் டாலர் அளவிற்கு விற்பனையாகும் கொய்மலர்களில், இந்தியாவின் பங்கு 2 விழுக்காடு மட்டுமே. இந்தியாவில் சுமார் 34 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மலர் சாகுபடி செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.250 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 1985 ஆம் ஆண்டில் கொய்மலர் சாகுபடி தொடங்கப்பட்டது.

பசுமைக் குடில்கள் மூலம் தொடங்கப்பட்ட இந்த மலர் சாகுபடியில் தற்போது 50 ஹெக்டேர் பரப்பளவில் பசுமைக் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொய்மலர் சாகுபடி நீலகிரியில் அதிகரித்துவரும் சூழலில் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மேலும் கவனம் செலுத்தி இத்தொழிலை ஊக்குவிக்க வேண்டும்.

ஆனால ், சிறந்த இடுபொருட்கள் சரியான விலையில் கிடைக்காததாலும ், நவீன தொழில்நுட்ப முறைகள் விவசாயிகளை உடனடியாக சென்றடையாததாலும ், முறையான வர்த்தக சந்தைகள் அமைக்கப்படாததாலும ், விவசாயிகள் தரும் மலர்களுக்கான பண பட்டுவாடா உரிய நேரத்தில் கிடைக்காததால், மலர் சாகுபடியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுபோன்ற பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

நீலகிரி மாவட்ட நிர்வாகமும ், தோட்டக்கலைத் துறை அதிகாரிகளும ், நீலகிரி ரோஜா சங்கத்தினரும் இணைந்து செயல்பட்டு உதகை ரோஜா பூங்காவை சர்வதேச அளவில் ரோஜா ரகங்களை ஆய்வு செய்யும் மையமாக மாற்ற ி, இப்பூங்காவை மேலும் பிரபலமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சர்வதேச ரோஜா கருத்தரங்கு நிகழ்ச்சிகள் உதகையிலுள்ள ஜே.எஸ்.எஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments