Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு 15 பைசா உயர்வு

Webdunia
திங்கள், 19 ஜனவரி 2009 (13:30 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா அதிகரித்தது.

ஆசிய நாட்டு சந்தைகளில் சாதகமான நிலை நிலவுவதால், இந்திய பங்குச் சந்தையிலும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யும். இதனால் டாலர் வரத்து இருக்கும், அத்துடன் மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்ததால் ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.48.64 என்ற அளவில் இருந்தது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 15 குறைவு.

வெள்ளி கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.48.70- 48.80 பைசா.

வெள்ளிக் கிழமையும் இந்திய ரூபாயின் மதிப்பு 24 பைசா அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் விலை ரூ.48.52 முதல் ரூ.48.66 என்ற அளவில் இருந்தது.


ரிசர்வ் வங்க ி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலர் மதிப்பு ரூ.48.56 பைசா
1 யூர ோ மதிப்பு ரூ.64.82
100 யென ் மதிப்பு ரூ.53.48
1 பவுன்ட் ஸ்டெர்லிங ் ரூ.72.28.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments