Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணவீக்கம்-நிதியமைச்சகம் விளக்கம்

Webdunia
வெள்ளி, 16 ஜனவரி 2009 (15:24 IST)
மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் பிரிவு பணவீக்கம் விகிதம் குறித்து விடுத்துள்ள அறிக்கையில், சென்ற ஜனவரி 3 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பணவீக்க விகிதம் 5.2 விழுக்காடாக குறைந்துள்ளது.

அதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 5.9% ஆக இருந்தது. இந்த வாரம் மொத்த விலை குறியிட்டு எண் அட்டவனையில் 67 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது.
பணவீக்கம் சென்ற வருடம் ஆகஸ்ட் 8 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அதிகபட்சமாக 12.9% இருந்து.

கடந்த ஐந்து மாத காலத்தில் பணவீக்கம் 767 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் பிரிவில், பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக கடந்த வாரமும் குறைந்த அளவே காணப்பட்டது.

முக்கிய பொருட்கள் வகையில் முந்தைய வாரம் 11.6% இருந்த பணவீக்க விகிதம், அதற்கு அடுத்த வாரம் 10.9% குறைந்துள்ளது. இதில் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் அல்லாத பிரிவில் பணவீக்க விகிதம் 9.5-9.6% ஆக இருந்தது.

இரும்பு மற்றும் மாங்கனீஸ் மூலப் பொருள ், புளோரைட ், மெக்னசைட ், பாஸ்போரைட் மற்றும் பெல்ஸ்பார் ஆகிய தாதுக்களின் அதிக பணவீக்கம் காரணமாக கனிமப் பொருட்களின் பணவீக்க விகிதம் தொடர்ந்து மூன்றாவது வாரமாக 40% என்ற அளவிலேயே இருந்தது.

எரிபொருள் மற்றும் ஆற்றல் பிரிவில் பணவீக்க விகிதம் (-)1.3 ஆக இருந்தது. இது அதற்கு முந்தைய வாரத்தில் (-)0.7 ஆக இருந்தது.

உற்பத்தி பொருட்கள் பிரிவில் முந்தைய வாரம் பணவீக்க விகிதம் 6.2% இருந்ததை ஒப்பிடுகையில், கடந்த வாரம் 5.6% குறைந்தது. அதே நேரத்தில் சர்க்கர ை, உப்ப ு, புகையிலைப் பொருட்கள ், ஜவுள ி, ரப்பர ், சிமெண்ட ், சிலேட ், கிராபைட ், அடிப்படை உலோகங்கள ், கலப்பு உலோகங்கள் ஆகியவற்றில் பணவீக்க விகிதம் 2 இலக்கமாகவே நீடித்துள்ளது.

கூட்டு உணவு விலைப் பட்டியலில் (எடை=25.43 சதவீதம்) இந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் 7.9% குறைந்திருந்தது. இது அதற்கு முந்தைய வாரத்தில் 8.5% இருந்தது. உணவு தானியங்கள், பழங்கள் ஆகியவை அதிக பணவீக்க விகிதமாக 9 சதவீதம் முதல் 20 % வரை தொடர்ந்து இருந்து வந்தது என்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments