Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்யம் கம்ப்யூ- புது இயக்குநர்கள்

Webdunia
வெள்ளி, 16 ஜனவரி 2009 (13:29 IST)
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நிர்வாக பணிகளை மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் புதிதாக மூன்று இயக்குநர்களை மத்திய அரசு நேற்று நியமித்துள்ளது.

சத்யம் கம்ப்யூட்டர் சேர்மன் ராமலிங்க ராஜு ரூ.7 ஆயிரம் கோடி முறைகேடு செய்துள்ளதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து ராமலிங்க ராஜு, அவரின் தம்பியும் மேலாண்மை இயக்குநருமான ராம ராஜு, தலைமை நிதி அதிகாரி உட்பட சிலரை, ஆந்திர மாநில சி.பி.-சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு ஏற்கனவே கம்பெனிகள் சட்டப்படி தீபக் பாரேக், கிரன் கார்னிக், சி.அச்சுதானந்தன் ஆகியோரை இயக்குநர்களாக நியமித்துள்ளது.

இந்நிலையில் நேற்று இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ- CII) மூத்த ஆலோசகர் தருன் தாஸ், இந்திய காப்பீடு கழகத்தைச் சேர்ந்த எஸ்.பாலகிருஷ்ணா மனியாக் ( LIC), பிரபல ஆடிட்டர் டி.என்.மனோகரன் ஆகியோரை இயக்குநர்காள நியமித்தது.

இதன் இயக்குநர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க, மத்திய அரசு நிதி உதவி செய்யும் என்று மத்திய வர்த்தக-தொழில் துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்து இருந்தார். நேற்று மத்திய நிறுவன துறை அமைச்சர் பிரேம் சந்த் குப்தா கூறுகையில், அரசு நியமித்த இயக்குநர்கள் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் இதன் செயல்பாடு நன்றாக இருப்பதாகவும், இதன் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறாமல், தொடர்ந்து இருக்க விருப்பதம் தெரிவித்துள்ளதாக கருதுகின்றனர். இந்நிறுவத்திற்கு ரூ.1,700 கோடி வரை வரவு வரவேண்டியதுள்ளது. இதன் நிதி நிலைமை பற்றி முழுமையாக தெரியாமல், எவ்வாறு உதவி அளிப்பது பற்றி கூறமுடியம் என்று கேட்டார்.

மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அசோக் சாவ்லா, பழைய இயக்குநர்கள் குழுவால், இடைக்காலத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராம் மயாம்பதியிடம் இருந்து அரசுக்கு சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு ரூ.150 கோடி நிதி உதவி தேவைப்படுவதாக மின்னஞ்சல் அனுப்பியிருப்பாதக தெரிவித்து இருந்தார். ஆனால் இந்த மின்னஞ்சல் எப்போது வந்தது என்றோ, அது பற்றிய விபரங்களையோ தெரிவிக்கவில்லை. தற்போது ராம் மயாம்பதி, சத்யம் நிறுவனத்திற்கு மென்பொருள் வடிவமைப்பு போன்ற பணிகளை வழங்கும் நிறுவனங்களுடன் வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா சென்றுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments