Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்யம் நிறுவனத்திற்கு நிதியுதவி அளிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

Webdunia
வியாழன், 15 ஜனவரி 2009 (15:15 IST)
ராமலிங்க ராஜு செய்த முறைகேடுகள் காரணமாக நிதிப்பற்றாக்குறையால் தவிக்கும் சத்யம் நிறுவனத்திற்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என தொழில்துறை இணையமைச்சர் அஷ்வனிகுமார் தெரிவித்துள்ளார்.

தலைநகர் புதுடெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த அமைச்சர் அஷ்வனிகுமார், நிதியுதவி கோருவது குறித்து புதிதாக அமைக்கப்படவுள்ள சத்யம் நிறுவனத்தின் வாரியக் குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
சத்யம் நிறுவனத்தின் நிதி மோசடி காரணமாக இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என தாம் நம்புவதாகவும் அமைச்சர் அஷ்வினிகுமார் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments