Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்-பைக் விற்பனை பாதிப்பு

Webdunia
திங்கள், 12 ஜனவரி 2009 (17:14 IST)
டிசம்பர் மாதம் கார் விற்பனை 6.9 விழுக்காடும், மோட்டார் பைக், ஸ்கூட்டர் விற்பனை 22.9 விழுக்காடும் குறைந்துள்ளது.

சென்ற டிசம்பர் மாதத்தில் 82,105 கார்கள் விற்பனையாகி உள்ளது. இது 2007 டிசம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் 6.9% குறைவு.
(2007 டிசம்பர் விற்பனை 88,272).

டிசம்பர் மாதம் 3,35,820 மோட்டார் பைக்குள் விற்பனையாகி உள்ளது. இது 2007 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 22.9% குறைவு. (2007 டிசம்பர் விற்பனை 4,35,925).

மோட்டார் பைக், ஸ்கூட்டர், ஸ்கூட்டி, மொபெட் போன்ற எல்லா இரு சக்கர வாகனங்களையும் சேர்த்தால் மொத்தம் 4,61,302 விற்பனையாகியுள்ளது.

இது சென்ற வருடம் டிசம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் 15.4% குறைவு.

வேன், லாரி, டிரக் போன்றவைகளின் விற்பனை 58.2 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த ரகத்தில் அடங்கும் வாகனங்கள் டிசம்பர் மாதத்தில் 17,920 விற்பனையாகி உள்ளளது.

( இது சென்ற வருடம் டிசம்பர் மாத விற்பனை 42,961),

இந்த தகவல்களை இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. [ Society of Indian Automobile Manufacturers (SIAM)].
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷியா முஸ்லீம்களை கொல்லும் சன்னி முஸ்லீம்கள்!? லெபனானில் கலவரம்! - யார் காரணம் தெரியுமா?

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

Show comments