Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிஃப்டி 47-சென்செக்ஸ் 180 புள்ளி சரிவு

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (17:03 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் குறைந்தன. அதே நேரத்தில் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. சத்யம் கம்யூட்டர் நிறுவனத்தின் நிதி முறைகேட்டால், அதன் பங்குவிலை 70 விழுக்காடு வரை குறைந்துள்ளது.

இதே துறையைச் சேர்ந்த மற்ற மூன்று பெரிய நிறுவனங்களான டி.சி.எஸ், விப்ரோ, இன்போசிஸ் பங்குகளின் விலை 5 விழுக்காடு அதிகரித்தது. இதற்கு காரணம் சத்யம் கம்ப்யூட்டரில் பணிகள் கொடுத்து வந்த நிறுவனங்கள், டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகியவைகளுக்கு மாறலாம். இதனால் இவைகளின் வருவாய் அதிகரிக்கும் என்பதால் பங்கு விலை அதிகரித்தது என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

அதே நேரத்தில் தகவல் தொழில் நுட்ப துறையைச் சேர்ந்த மற்ற நிறுவனங்களான ஹெச்.சி.எல் டெக்னாவஜிஸ், பைனான்சியல் டெக்னாலஜிஸ், மோசர் பியர், எம்பிசாஸ், நிட்டி லிமிடெட், பாட்னி கம்ப்யூட்டர், டெக் மஹேந்திரா ஆகியவற்றின் விலை குறைந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 180.41 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,406.47 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 47.40 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 2,873.00 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 77.12, சுமால் கேப் 106.92, பி.எஸ ். இ 500- 76.25 புள்ளிகள் குறைந்தன.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 577 பங்குகளின் விலை அதிகரித்தது. 1879 பங்குகளின் விலை குறைந்தது. 62 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி பிரிவு குறியீட்டு எண் 1.97%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 1.31%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 2.81%, மின் உற்பத்தி பிரிவு 1.99%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 4.70%, உலோக உற்பத்தி பிரிவு 7.16%, தொழில் நுட்ப பிரிவு 1.87%, வாகன உற்பத்தி பிரிவு 1.01%, எஸ்டேட் பிரிவு 5.15% குறைந்தது.

ஆனால் தகவல் தொழில் நுட்ப பிரிவு மட்டும் 0.18% அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments