Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திவான் ஹவுசிங் வட்டி குறைப்பு

Webdunia
வியாழன், 8 ஜனவரி 2009 (16:07 IST)
மும்ப ை: திவான் ஹவுசிங் பைனான்ஸ் வீட்டு வசதி கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது.

இந்தியாவில் வீடு, அடுக்கு மாடி குடியிருப்புகள் வாங்க கடன் கொடுக்கும் தனியார் நிறுவனங்களில், திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் [ Dewan Housing Finance
Corporation Limited (DHFL)] இரண்டாவது இடத்தில் உள்ளது.

ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைத்ததை தொடர்ந்து ஏற்கனவே பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள் வீட்டு வசதி கடன் வட்டியை குறைத்துள்ளன. இதே போல் தனியார் நிறவனங்களும் வட்டியை குறைக்கின்றன.

திவான் ஹவுசிங் பைனான்ஸ் நேற்று புதிய கடனுக்கும், ஏற்கனவே வாங்கியுள்ள கடனுக்கும் வட்டியை குறைப்பதாக அறிவித்தது.

இந்த புதிய திட்டத்தின் படி ரூ,20 இலட்சத்திற்கும் குறைவாக உள்ள கடனுக்கு 9.75 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும். இதே போல் ரூ.20 இலட்சத்திற்கும் மேல் உள்ள கடனுக்கு 11.25 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும். இந்த வட்டி கடனை திருப்பி கட்டும் காலத்திற்கு தகுந்தாற்போல் வேறுபடும்.

திவான் ஹவுசிங் குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினருக்கு அதிக அளவு கடன் வழங்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.

முன்பு வசூலித்த வட்டியில் இருந்து நேற்று முதல் கால் விழுக்காடு வட்டி குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி நேற்று இருந்து கணக்கிடப்படும் என்று அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments