Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்யம் கம்ப்யூட்டர் சேர்மன் ராமலிங்க ராஜு ராஜினமா

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (13:53 IST)
ஹைதரபாத ்: சத்யம் கம்யூட்டர் நிறுவனத்தின் ஸ்தாபகரும், சேர்மனுமான ராமலிங்க ராஜு, சேர்மன் பதவியை ராஜுனமா செய்வதாக அறிவித்தார்.

இந்தியாவின் முன்னணி மென்பொருள் வடிவமைப்பு நிறுவனங்களில் ஒன்று சத்யம் கம்ப்யூட்டர்ஸ். இது ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. இதன் சேர்மன் ராமலிங்க ராஜுவின், மகன்களுக்கு சொந்தமா ன இரண்டு நிறுவனங்களை வாங்கியது தொடர்பாக பிரச்சனை எழுந்தது.

ராமலிங்க ராஜு, அவரின் குடும்பத்தாருக்கு சொந்தமான சத்யம் கம்யூர்ட்டர் நிறுவனத்தின் பங்குகளை, பல முதலீட்டு நிறுனங்களில் அடமானமாக வைத்து கடன் வாங்கியிருந்தனர். ராமலிங்க பாஜுவின் மகனுக்கு சொந்தமான இரண்டு நிறுவனங்களை, அதன் மதிப்பிற்கும் மிக அதிகமாக வாங்குவதற்கு முடிவு செய்ததற்கு, சிறு முதலீட்டாளர்கள் முதல் முதலீட்டு நிறுவனங்கள் வரை பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சத்யம் கம்யூட்டர் நிறுவனத்தின் பணத்தை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதை ஒட்டி பங்குச் சந்தைகளில் சத்யம் கம்யூட்டர் நிறுவனத்தின் பங்கு விலை தொடர்ந்து சரிய துவங்கியது. குறிப்பாக முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்ய துவங்கினார்கள்.

அத்துடன் ராமலிங்க ராஜு அடமானமாக முதலீட்டு நிறுவனங்களில் வைத்திருந்த பங்குகளை, இந்த நிறுவனங்கள் சந்தையில் விற்பனை செய்ய துவங்கின. இதனால் நேற்றைய நிலவரப்படி ராமலிங்க ராஜு குடும்பத்தினரின் வசம் உள்ள பங்குகளின் எண்ணிக்கை, மொத்த பங்குகளில் 3.6 விழுக்காடாக குறைந்தது.


இந்நிலையில் ராமலிங்க ராஜு சேர்மன் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்நிறுவனத்தில் இயக்குநர்கள் குழு கூட்டம் ஜனவரி 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சேர்மன் பதவியில் இருந்து ராமலிங்க ராஜுவும், மேலாண்மை இயக்குநர் பதவியில் இருந்து அவரது தம்பி ராம ராஜு நீக்கப்படுவார்கள் என்ற நிலையில், இன்று சேர்மன் பதவியை ராஜினமா செய்வதாக ராமலிங்க ராஜு அறிவித்தார்.

இவர் இயக்குநர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இது புலி வாலை பிடித்து சுற்றுவதற்கு சமமாக உள்ளது. அதனிடம் இருந்து தப்பித்து எப்படி வெளியே வருவது என்று தெரியாமல், சுற்றிக் கொண்டு இருப்பது போல் உள்ளது என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட் ரத்து.. ஆனால் பணியிட மாற்றம்..!

கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

இரவு 7 மணிக்குள் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Show comments