Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவர்சில்வர் மீது குவிப்பு வரி கூடாது

Webdunia
திங்கள், 5 ஜனவரி 2009 (18:19 IST)
அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எவர்சில்வர் (ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் stainless steel) தகடு, உருளை கம்பி போன்றவைகளின் இறக்குமதி மீது குவிப்பு வரி விசாரணை நடத்தக்கூடாது. அத்துடன் இவைகளுக்கு குவிப்பு வரி விதிக்க கூடாது என்று அகில இந்திய ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் இன்டஸ்டிரிஸ் அசோசிசன், [ All India Stainless Steel Industries Association(AISSIA)], பிராசஸ் பிளாண்ட் மெஷினரி அசோசிசன் ஆப் இந்திய ா [Process Plant Machinery Association of India(PPMAI)] ஆகியவை கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள், அதன் உற்பத்தி செலவை விட குறைந்த விலைக்கு, மற்றொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டால் அதன் மீது ஆன்டி டம்பிங் டியூட்டி எனப்படும் குவிப்பு வரி விதிக்கப்படுகிறது.

அயல்நாடுகளின் இறக்குமதியால், உள்நாட்டு தொழில்கள் பாதிக்காமல் இருக்க, இறக்குமதி செய்யப்படுபவை மீது குவிப்பு வரி விதிக்கப்படுகிறது.

மத்திய அரசு எவர்சில்வர் தகடு போன்றவை மீது குவிப்பு வரி விதிக்க உள்ளது. இதை விதிக்க கூடாது என்று எவர்சில்வர் பாத்திரங்கள் தயாரிப்பாளர் சங்கமான இந்திய ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் இன்டஸ்டிரிஸ் அசோசிசன ், பாத்திரஙகளை இயந்திரங்கள் மூலம் உற்பத்தியாளர்களின் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக நாளை வர்த்தக, தொழில் அமைச்சக உயர் அதிகாரிகளை சந்தித்து நேரில் வலியுறுத்த போவதாக கூறியுள்ளனர்.

இந்திய ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் இன்டஸ்டிரிஸ் அசோசிசன ் தலைவர் பத்ரி பால்வாடா விடுத்துள்ள அறிக்கையில், தற்போது 5 ஆயிரம் சிறு தொழில்கள் பல்வேறு வகையான பாத்திரம் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளன. இவைகளில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இவை பல பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்கின்றன. இதற்கு இறக்குமதி செய்யும் எவர்சில்வர் தகடுகளையே நம்பி உள்ளன.

இவை அயல்நாடுகளில் இருந்து ரூ.1,800 கோடி மதிப்புள்ள எவர்சில்வர் தகடு போன்றவைகளை இறக்குமதி செய்கின்றன. இவைகளில் பெரும்பாலான தொழிற்சாலைகள் டில்லி,மகாராஷ்டிரா,ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளன.

உள்நாட்டு எவர்சில்வர் தயாரிப்பு நிறுவனமான ஜிந்தால் ஸ்டீல் லிமிடெட் கோரிக்கையை ஏற்று, வர்த்தக அமைச்சகம ் இறக்குமதி செய்யப்படும் எவர்சில்வர் மீது குவிப்பு வரி விசாரணையை துவக்கியுள்ளது.
அயல்நாடுகளில் உள்ள ஹோட்டல்கள் உட்பட பல வாடிக்கையாளர்கள் கேட்டும் பொருட்களை தயாரிக்க 1250 மில்லி மீட்டரும், அதற்கும் அதிகமாக அகலம் உள்ள தகடுகள் தேவைப்படுகிறது. இவை தயாரிக்க அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியதுள்ளது.

ஜிந்தால் ஸ்டீல் தவிர மற்ற எவர்சில்வர் தகடு போன்றவைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மேக்னடிக் தர எவர்சில்வர் தகடுகளை தயாரிப்பதில்லை. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பெரும்பாலான நாடுகள், இன்டக்ஸன் முறையிலான அடுப்பில் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் மேக்னடிக் தர எவர்சில்வர் தகடுகளில் தயாரித்த பாத்திரங்களையே கேட்கின்றன என்று பத்ரி பால்வாடா கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

Show comments