Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைப்பு தொகை வட்டி-சிண்டிகேட் வங்கி அறிவிப்பு

Webdunia
திங்கள், 5 ஜனவரி 2009 (15:16 IST)
பெங்களூர ்: சிண்டிகேட் வங்கி வைப்பு நிதிக்கான புதிய வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.

இதன்படி 15 நாள் முதல் 45 நாட்கள் வரையிலான ரூ.1 கோடிக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு 4.75 விழுக்காடு வட்டியும ், 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான வைப்புத் தொகைக்கு 6 விழுக்காடு வட்டியும் வழங்கப்படும்.

இதே போல் 91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு 7.25 விழுக்காடு, 180 நாட்கள் முதல் ஒரு வருடம் வரையிலான வைப்புத் தொகைக்கு 8.50 விழுக்காடு வட்டி வழங்கப்படும்.

அத்துடன் 1 வருடம் முதல் 499 நாட்கள் வரை வைக்கப்படும் வைப்புத் தொகைக்கு 8.75 விழுக்காடு வட்டியும், 500 நாட்கள் முதல் 2 ஆண்டுவரையான வைப்புத் தொகைக்கு 9.10 விழுக்காடும், 2 ஆண்டு முதல் 5 ஆண்டுவரையிலான வைப்புத் தொகைகளுக்கு 8.75 விழுக்காடும், 5 ஆண்டுகளுக்கு மேல் வைக்கப்படும் வைப்பு தொகைக்கு 8.50 விழுக்காடு வட்டியும் கொடுக்கப்படும்.

இந்த புதிய வட்டி விகிதம் இன்று முதல் (ஜனவரி 5) முதல் அமலுக்கு வருகிறது. என்று சிண்டிகேட் வங்கியின் துணைப் பொது மேலாளர் பி.எஸ். நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments