ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2009 (18:07 IST)
மும்ப ை: தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு உட்பட சில சலுகைகளை இன்று அறிவித்துள்ளது.

இதன்படி வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை அரை விழுக்காடு குறைத்துள்ளது. இனி வங்கிகள் திரட்டும் வைப்பு நிதியில் 5 விழக்காடு வரை மட்டும் ரிசர்வ் வங்கியின் இருப்பு கணக்கில் வைத்தால் போதும்.

இதனால் நிதி சந்தையில் ரூ.20 ஆயிரம் கோடி பணப்புழக்கம் அதிகரிக்க வழி ஏற்பட்டுள்ளது. வங்கிகள் கடன் கொடுப்பதற்கு அதிக அளவு பணம் கிடைக்கும்.

இதே போல் ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கடன் (ரிபோ) மீதான வட்டியை 1 விழுக்காடு குறைத்துள்ளது. இதனால் வங்கிகளுக்கு 5.5 விழுக்காடு வட்டியில் கடன் கிடைக்கும்.

வங்கிகள் அவைகளின் உயரி நிதியை, ரிசர்வ் வங்கியில் குறுகிய கால வைப்பு நிதியாக வைக்கின்றன. இது ரிவர்ஸ் ரிபோ என்று அழைக்கப்படுகிறது. இதன் வட்டி விகிதத்தை 5 விழுக்காட்டில் இருந்து 4 விழுக்காடாக குறைத்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்தா? அமெரிக்க ராணுவத்தின் கைவரிசையா? 5 பேர் பலி

ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: புத்தாண்டில் உக்ரைன் அதிபர் அறிவிப்பு..!

விஜயை சிக்க வைத்த அஜித் வாக்குமூலம்!.. விரைவில் சம்மன்!.. பொங்கல் டெல்லியில்தானா?!...

யாருக்கும் பாரமா இருக்க மாட்டேன்!. பல லட்சம் செலவில் தனக்குத்தானே கல்லறை கட்டிய மனிதர்!..

மனைவியை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கிய கணவர்.. புத்தாண்டில் பரிதாப நிகழ்வு..!

Show comments