Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் சிறுதொழில்களுக்கு வார விடுமுறையை குறைக்க வேண்டும்- மடீசியா கோரிக்கை

Webdunia
புதன், 31 டிசம்பர் 2008 (13:15 IST)
மதுர ை: தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் சிறுதொழில்களுக்கு வார விடுமுறையை 2 நாட்களுக்குப் பதிலாக, ஒரு நாளாக குறைக்க வேண்டும் எ ன, மதுரை மாவட்ட சிற ு, குறந்தொழில்கள் சங்கம் (மடீட்சியா) கோரிக்கை விடுத்துள்ளது.

மின் பற்றாக்குறையை சமாளிக்க தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு 20 விழுக்காடு மின் வெட்டிலிருந்து, 15 விழுக்காடாக குறைத்திருப்பதை மடீட்சியா வரவேற்கிறது.

மின் பற்றாக்குறையை சமாளிக்க உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு 40 விழுக்காடு மின் வெட்டிலிருந்து 30 விழுக்காடாக குறைப்பது அல்லது வாரத்தில் 5 நாட்கள் முழுமையாக தொழிற்சாலைகள் இயக்கவும் 2 நாட்கள் கட்டாய விடுமுறையும் விட வேண்டும் என்ற மின் துறை அமைச்சரின் யோசனை மடீட்சியா வரவேற்கிறது.

அதேநேரத்தில் தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு 20 விழுக்காடாக மின் வெட்டிலிருந்து 15 விழுக்காடாக குறைப்பது அல்லது தொழிற்சாலைகள் முழுமையாக இயக்கி வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுமுறை விட வேண்டும் என்ற முடிவு முரண்பாடாக உள்ளது.

ஆகவ ே, தாழ்வழுத்த மின்சாரம் உபயோகிக்கும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை என்பதற்குப் பதிலாக, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என அறிவிக்க வேண்டும்.

அத்துடன் தினசரி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உள்ள மின் தடையை முழுவதுமாக நீக்க முயற்சி செய்த ு, சிறுதொழில் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என மடீட்சியா துணைத் தலைவர் என். சோமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments