Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 லட்சம் டன் சர்க்கரை வெளி சந்தையில் விற்பனை

Webdunia
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (13:34 IST)
புது டெல்ல ி: ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கு, வெளிசந்தையில் 50 லட்சம் டன் சர்க்கரை விற்பனை செய்வதற்கு, சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி ஜனவரி மாதத்தில் 17 லட்சம் டன், பிப்ரவரியில் 16 லட்சம் டன், மார்சசில் 17 லட்சம் டன் சர்க்கரை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும்.

மத்திய அரசு ஏற்கனவே ஜனவரி மாதம் வெளி சந்தை விற்பனைக்கு 2.01 லட்சம் டன் சர்க்கரைக்கு அனுமதி வழங்கியுள்ளது தற்போது அறிவித்துள்ளதையும் சேர்த்து ஜனவரி மாதத்தில் 19.01 லட்சம் டன் சர்க்கரை விற்பனை செய்யப்படும்.

மத்திய அரசு அறிவித்துள்ள அளவு சர்க்கரையை, ஆலைகள் விற்பனை செய்யாவிட்டால், அவை அரசு பொது விநியோக முறையில் வழங்க எடுத்துக் கொள்ளும்.

மத்திய அரசு வெளிச்சந்தையில் சர்க்கரை விலையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதன் விலை அதிகரித்தால், கூடுதல் அளவு சர்க்கரை விற்பனை செய்ய அனுமதிக்க தயங்காது என்று அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments