Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான கட்டணம் குறைப்பு

Webdunia
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (12:26 IST)
புது டெல்ல ி: புது வருடத்தில் இருந்து விமான பயணிகள் போக்குவரத்து நிறுவனங்கள் கட்டணத்தை குறைத்துள்ளன.

தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், உள்நாட்டில் எல்லா பகுதிகளுக்கும் எகனாமி வகுப்பு விமான கட்டணத்தை 40 விழுக்காடு குறைத்துள்ளதாக நேற்று அறிவித்தது.

இதே போல் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்பைய்ஸ் ஜெட் நிறுவனமும் கட்டணத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் கட்டண குறைப்பு பற்றிய விபரத்தை வெளியிடவில்லை.

கிங்பிஷர் ஏர்வேஸ் நிறுவனமும் புது வருடத்தில் இருந்து விமான கட்டணத்தை குறைப்பதாக நேற்று அறிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் ஏர்-இந்தியா, கிங்பிஷர், ஜெட் ஏர்வேஸ், ஸ்பைய்ஸ் ஜெட் ஆகியவை, கூடுதல் கட்டணமாக வசூலித்து வந்ததில் 1 டிக்கட்டிற்கு ரூ.400 குறைத்தன.

விமான பெட்ரோலின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், தற்போது விமான சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கட்டணத்தை குறைத்து வருகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments