Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌யி‌ல்வே வருவா‌ய் 8.23 ‌விழு‌க்காடு உய‌ர்வு

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (16:55 IST)
ரயில்வேத் துறை இ‌ந்த ஆ‌ண்டு டிச‌ம்ப‌ர் 11 ஆ‌ம் தே‌தி முத‌ல் 20 ஆ‌ம் தேதி வரையிலான கால‌த்‌தி‌‌ல் ரூ.2,186.75 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டப்பட்ட வருவாயுடன் (ரூ.2020.40 கோடி) ஒப்பிடுகையில் இது 8.23 ‌விழு‌க்காட ு கூடுதலாகும்.

சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துறைக்கு டிச‌ம்ப‌ர் 11 ஆ‌ம் தே‌தி முத‌ல் 20 ஆ‌ம் தேதி வரை ரூ.1522.61 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் இத்தொகை ரூ.1403.86 கோடி மட்டுமே. இது 8.46 விழு‌க்காடு கூடுதலாகும்.

ரயில் பயணிகள் கட்டணம் வாயிலாக செ‌ப்ட‌ம்ப‌‌ர் 11 ஆ‌ம் தே‌தி முத‌ல் 20 ஆ‌ம் தேதி வரை ரூ.591.44 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 7.42 ‌விழு‌க்காடு அதிகமாகும். கட‌ந்த ஆ‌ண்டு இதே கால‌த்‌தி‌ல் ரூ.550.60 கோடி ம‌ட்டுமே ‌கிடை‌த்தது.

பெட்டிகள் தயாரிப்பு மூலம் கிடைத்த வருமானம் கடந்த ஆண்டு ரூ.52.29 கோடியாக இரு‌ந்தது. இ‌ந்த ஆ‌ண்டு இது ரூ.57.50 கோடியாக அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. இது 9.96 ‌விழு‌க்காடு அ‌திகமாகு‌ம்.

டிச‌ம்ப‌ர் 11 ஆ‌ம் தே‌தி முத‌ல் 20 ஆ‌ம் தேதி வரை 20.42 கோடி பேர் முன்பதிவு செய்து பயணம் செய்து‌ள்ளனர். கடந்த ஆண்டில் இதே கால‌த்‌தி‌ல் 18.65 கோடி பேர் முன்பதிவு செய்து பயணம் செய்து‌ள்ளனர். இது 9.48 ‌விழு‌க்காடு அதிகரிப்பாகும்.

புறநகர் ரயில்களில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 10.88 கோடியில் இருந்து 11.43 கோடியாக அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. இது 4.99 ‌விழு‌க்காடு கூடுதலாகு‌ம். மற்ற ரயில்களில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 7.76 கோடியில் இருந்து 8.99 கோடியாக அதிகரித்துள்ளது. இது 15.78 ‌விழு‌க்காடு வளர்ச்சியாகும். இ‌த்தக‌வ‌ல்கள ை ர‌யி‌ல்வே‌ அமை‌ச்சக‌ம ் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த நபர்? யார் அந்த சார்? மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்! - எடப்பாடி பழனிசாமி!

இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

விமான விபத்தில் இருந்து தப்பித்த 2 பணிப்பெண்கள்.. மயக்கத்தில் இருந்து எழுந்ததும் கேட்ட கேள்வி..

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்..!

விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யாதான்! - அஜர்பைஜான் அதிபர் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

Show comments