Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுமைகளுடன் தொழில் வர்த்தக பொருட்காட்சி

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (12:59 IST)
மதுர ை: பல்வேறு புதுமைகளுடன் தொழில் வர்த்தகப் பொருட்காட்சி, தமுக்கம் மைதானத்தில் வரும் 19 ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேல ு, தலைவர் எஸ்.ஜெயபாலன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வேளாண் பொருட்கள் அடிப்படையிலான தொழிற்சாலைகளின் வளர்ச்சியே வேளாண் துறை முன்னேற்றத்திற்கு முக்கியம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் "தொழில் உறவே வேளாண்மைக்கு விடியல ்' எனும் முழக்கத்துடன் இந்த ஆண்டு தொழில் வர்த்தக பொருள்காட்சி நடத்தப்பட உள்ளது.

இதில் 300 க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள ், அலுவலக சாதனங்கள ், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள ், உணவுப் பொருட்கள ், தொழில் கருவிகள் உள்பட அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்படும்.

சிறுதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை விளக்குவதற்கா க, கே.வி.ஐ.சி. நிறுவனம் சார்பில் அரங்கு அமைக்கப்படுகிறது. வேளாண் பொருட்கள் அடிப்படையிலான தொழில் நிறுவனங்கள் அரங்குகள் அமைக்கின்றன.

இந்த கண்காட்சியின் போது, இளம் தொழில் முனைவோரும ், வணிகர்களும ், மகளிரும் தொழில் வணிகத் துறையில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில் மூன்று கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன.

இந்த கண்காட்சி ஜனவரி 5 ஆம் தேதி வரை 18 நாட்கள் மாலை 4 மணி முதல் 9 மணி வர ை, விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என்று தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments