Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருக்கு தொழில் பாதிப்பில்லை-பாஸ்வான்

Webdunia
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (16:21 IST)
புது டெல்ல ி: உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், இந்தியாவைச் சேர்ந்த உருக்கு தொழில் துறை அதிக அளவு பாதிக்கப்படவில்லை என்று மத்திய உருக்குத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.

இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில், உருக்கு துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறுகையில், நிதி நெருக்கடியின் பாதிப்பு உருக்கு துறையில் அதிக அளவு இல்லை. இது வரையிலும் ஊழியர்கள் பணயில் இருந்து நீக்கப்படவில்லை. உருக்கு உற்பத்தி நிறுவனங்கள் கோரியவைகளை அரசு செய்து கொடுத்துள்ளது.

அதே நேரத்தில் உருக்கு, இரும்பு பொருட்களின் விலை குறைந்துள்ளது. இதன் பயன்பாடு 13 விழுக்காட்டில் இருந்து 1.75 விழுக்காடாக குறைந்துள்ளது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால் நிதி நெருக்கடியின் பாதிப்பு குறைந்த அளவே உள்ளது.

உள்நாட்டு உருக்கு, இரும்பு உற்பத்தி நிறுவனங்களின் தேவையை கருத்தில் கொண்டு, உயர்ரக இரும்பு தாது ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதிக்கும் எண்ணம் இல்லை.

சுரங்கங்களில் உற்பத்தி நிறுத்த முடியாது. சுரங்கங்களில் 50 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். எனவே இதில் உற்பத்தியை நிறுத்துவது சாத்தியமில்லை. இதனால் தான் அரசு உயர்ரக இரும்பு தாது ஏற்றுமதியை நிறுத்த விரும்பவில்லை. இதன் ஏற்றுமதி அளவை குறைக்க ஒரே வழி, ஏற்றுமதி வரியை அதிகரிப்பதுதான் என்று ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments