Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் உலக கிராம கண்காட்சி- இந்தியா பங்கேற்பு

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2008 (15:51 IST)
புது தில்ல ி: துபாயில ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள, சர்வதேச உலக கிராம கண்காட்சியில், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கலந்து கொள்கிறது.

இது கிராம கைவினைக் கலைஞர்களுக்கு, கல ை, கைவினை மற்றும் கைத்தறி பொருட்களை, உலகச் சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பாகும். இந்தச் சந்தை சில்லறை விற்பனை சந்தையாகும்.

அத்துடன் இந்த கண்காட்சிக்கு வரும் பல்வேறு நாட்டு வர்த்தகர்களிடமிருந்து ஏற்றுமதி தொடர்புகள் கிடைக்கவும ், பொது மக்களிடையே தங்களது பொருட்கள் பற்றிய விவரங்களை விளம்பரப்படுத்தவும் நல்ல வாய்ப்பாக அமையும்.

இந்த கண்காட்சியில் இடம் பெறச் செய்வதற்காக இந்திய கல ை, கைவின ை, ஜவுள ி, பரிசுப் பொருட்கள ், அலங்கார நகைகள் உள்ளிட்ட பொருட்கள் பற்றிய விவரங்களை அனுப்புமாறு அந்தந்த மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு ஜனவரி மாத மத்தியில் துபாயில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச கண்காட்சியில், மாநில அரசு அதிகாரிகளும ், எஸ்.ஜி.எஸ்.ஓய் திட்டத்தின் பயனாளிகள் இரண்டு பேரும் கலந்து கொள்வார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments