Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட்டி குறைப்பு-வங்கிகள் ஆலோசனை

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2008 (12:13 IST)
புது டெல்ல ி: பொருளாதார மந்த நிலையை மாற்றி, வளர்ச்சி அடையும் விதமாக மத்திய அரசு பல சலுகைகளை அறிவித்தது. இதை தொடர்ந்து வங்கிகள் வீட்டு கடன், சிறு, தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் கடனுக்கு வட்டியை குறைப்பது பற்றி ஆலோசனை நடத்துகின்றன.

இன்று நடைபெறும் வங்கிகள் உறுப்பினராக உள்ள இந்திய வங்கிகள் சங்கத்தின் [ Indian Bank Association] கூட்டத்தில் வட்டி குறைப்பு பற்றிய முடிவு எடுக்கப்டும்.

இந்த சங்கத்தின் தலைவர் டி.எஸ்.நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்று நடைபெறும் கூட்டத்தில், சில குறிப்பிட்ட துறைகள் பற்றி விவாதிக்க உள்ளோம். வீட்டு கடன், சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் கடனில் எந்த அளவு வட்டி குறைப்பது என்பது பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மத்திய அரசு சென்ற ஞாயிற்றுக் கிழமை ரூ.5 இலட்சம் வரை உள்ள வீட்டு கடனுக்கும், ரூ.5 முதல் 20 லட்சம் வரை வழங்கும் கடனுக்கு சலுகைகளை வழங்கலாம் என அறிவித்தது. ரியல் எஸ்டேட், கட்டுமான துறையின் நெருக்கடியை தீர்க்க, வீட்டு கடனுக்கு சலுகை வழங்கப்படும் என்று அறிவித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments