Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நலிவுற்ற பிரிவினருக்கு உணவு பதப்படுத்தும் பயிற்சி

Webdunia
திங்கள், 8 டிசம்பர் 2008 (15:12 IST)
புது டெல்ல ி: உணவு பதப்படுத்தும் தொழிலுக்க ு, உணவு பதப்படுத்தும் துறைக்கான அமைச்சகம் பல்வேறு வசதிகளையும ், ஊக்கத் தொகைகளையும் அளித்து வருகிறது.

இவை திட்டம் சார்ந்ததாக உள்ளது என்பதோடு மட்டுமல்லாமல் எந்த குறிப்பிட்ட மாநிலத்தையோ பகுதியையோ சார்ந்ததாக இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆயினும் ஒருங்கிணைந்த மலைவாழ் மேம்பாட்டு திட்டம் செயல்படும் இடங்கள் மற்றும் கடினமான பகுதிகளில் அதிக அளவு உதவிகள் அளிக்கப்படுகின்றன.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் ஆகியோர் அதிகளவில் பயன்பெற வேண்டும் என்பதற்காக இப்பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் கருத்தரங்குகள் நடத்த உதவி செய்யப்படுகிறது.

இந்த கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டுமெனில் குறைந்தது 25 விழுக்காடு அளவிற்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பங்கு பெற வேண்டும். தொழில் முனைவோருக்கான மேம்பாட்டுத் திட்டங்களில் பயிற்சி பெற அளிக்க தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments