Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்வாட் வரி குறைப்பு

Webdunia
திங்கள், 8 டிசம்பர் 2008 (13:01 IST)
புது டெல்ல ி: இந்திய பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டும் வகையில், மத்திய அரசு சென்வாட் வரி குறைப்பு, ஏற்றுமதி வரி சலுகை, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக நிதி ஒதுக்கீடு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

புது டெல்லியில் நேற்று திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா செய்தியாளர்களிடம் கூறுகையில், உற்பத்தி வரியை குறைக்கும் விதமாக, இந்த நிதி ஆண்டின் மீதமுள்ள மாதங்களில் சென்வாட் (மத்தி ய மதிப்பு கூட்டு வரி) வரி, பெட்ரோலிய பொருட்கள் தவிர மற்ற பொருட்களுக்கு 4 விழுக்காடு குறைக்கப்படுகிறது. முன்பு சென்வாட் வரி முறையே 14%. 12%, 8% ஆக இருந்தது. இதில் தற்போது 4 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.

மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கவும், உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள தொழில் துறையின் தேக்கத்தை நீக்கவும், பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்பு, ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, அரசு உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்று தொழில் அதிபர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசு நேற்று சென்வாட் வரியை 4 விழுக்காடு குறைத்துள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்டு அலுவாலியா பேசுகையில், சந்தை (விற்பனை) நிலவரத்தை கருத்தில் கொண்டு, உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், வரி குறைப்பின் பலன் பொது மக்களுக்கு போய் சேரும் படி, அவை உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று கூறினார்.

மத்திய அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகர் கூறுகையில், நேரடி வரிகள் (வருமான வரி, நிறுவனவரி போன்றவை... ) குறைக்கப்படமாட்டாது. தற்போது மறைமுக வரியில் மட்டும் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. இந்த வருடம் நிதி நிலை அறிக்கை ( பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்ட போதே, நேரடி வரிகள் குறைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

மத்திய நிதித்துறை செயலாளர் அருன் ராமநாதன் கூறுகையில், தற்போதைய வரி சலுகைகளால் அரசுக்கு ரூ.8,700 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும். ஆனால் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும் போது. இந்த இழப்பு குறையும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments