Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரஸ்பர நிதிக்கு கட்டுப்பாடு

Webdunia
சனி, 6 டிசம்பர் 2008 (13:23 IST)
மும்ப ை: மியூச்சுவல் பண்ட எனப்படும் பரஸ்பர நிதிகளுக்கு செபி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன்படி குளோஸ் எண்ட் பண்ட் யூனிட்டுகளை திரும்ப ஒப்படைக்க முடியாது.

பரஸ்பர நிதி நிறுவனங்கள் குளோஸ் எண்ட, ஒப்பன் எண்ட் என்று இரண்டு விதமான திட்டங்களில் யூனிட்டுகளை வெளியிட்டு நிதி திரட்டுகின்றன.

இதில் ஒப்பன் என்ட் திட்டங்களில் யூனிட்டுகளை வாங்கியவர்கள் எப்போதும், அன்றைய மதிப்பில் விற்பனை செய்யலாம்.

ஆனால் குளோஸ் எண்ட் திட்டங்களில் யூனிட்டுகளை வாங்கியவர்கள், அதன் முதிர்வு காலத்திற்கு முன் யூனிட்டுகளை விற்பனை செய்ய முடியாது. அவ்வாறு விற்பனை செய்வதாக இருந்தால், யூனிட்டுகளின் அன்றைய மதிப்பில் குறிப்பிட்ட விழுக்காடு பணம் பிடித்தம் செய்யப்படும்.

சமீபத்தில் பங்குச் சந்தைகளின் சரிவை தொடர்ந்து, மியூச்சுவல் பண்ட் யூனிட்டுகளை விற்பனை செய்வது அதிக அளவு இருந்தது. இவர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் பரஸ்பர நிதி நிறுவனங்கள் தடுமாறின.

இந்த நிறுவனங்களுக்கு கடன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் வகையில், ரிசர்வ் வங்கி சிறப்பு நடவடிக்கையை எடுத்தது.

பரஸ்பர நிதி நிறுவனங்களில், தங்களிடம் உபரியாக உள்ள நிதியை தொழில், வர்த்தக நிறுவனங்கள், வங்கிசார நிதி நிறுவனங்கள் கணிசமான அளவு முதலீடு செய்கின்றன.

பங்குச் சந்தையில் நெருக்கடி, வங்கிகளில் கடன் கிடைப்பது தட்டுப்பாடு போன்ற நெருக்கடிகள் ஏற்படும் போது, பல்வேறு தரப்பில் இருந்தும் அதிக அளவு பரஸ்பர நிதி நிறுவனங்களின் யூனிட்டுகளை விற்பனை செய்கின்றனர்.

இதனால் பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில், செபி குளோஸ் எண்ட் யூனிட்டுகளை, அதன் முதிர்வு காலம் முடிவதற்கு முன் விற்பனை செய்ய புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது குறித்து செபி சேர்மன் சி.ஆர்.பாவே நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், குளோஸ் எண்ட் திட்டங்களின் யூனிட்டுகளை வாங்கியவர்கள், அதன் முதிர்வு காலம் முடிவடைவதற்கு முன்பு, யூனிட்டுகளை விற்பனை செய்ய முடியாது.

இந்த மாதிரி புதிதாக வெளியிடப்படும் யூனிட்டுகள் பங்குச் சந்தையில் பதிவு செய்யும் படி கூறப்பட்டுள்ளது. இவை விற்பனை செய்ய விரும்புபவர்கள், பங்குச் சந்தையில் விற்பனை செய்து கொள்ளலாம்.

தற்போது உள்ளது போல் பரஸ்பர நிதி நிறுவனங்களில் விற்பனை செய்ய முடியாது.

இந்த புதிய விதி புதிதாக குளோஸ் எண்ட் யூனிட்டுகளை வெளியிட அனுமதி பெறும் நிறுவனங்களுக்கும்,. ஏற்கனவே அனுமதி பெற்று வெளியிடாமல் இருக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

அதே போல் பரஸ்பர நிதி நிறுவனங்கள், யூனிட்டுகளை வெளியிட்டு திரட்டப்படும் நிதியை, இதன் முதிர்வு காலத்திற்கு, பிறகு உள்ள முதலீடு திட்டங்களில் (கடன் பத்திரங்கள் போன்றவை) முதலீடு செய்ய கூடாது என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments