Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய விபத்து காப்பீடு அறிமுகம்

Webdunia
வியாழன், 4 டிசம்பர் 2008 (16:53 IST)
இப்கோ டோக்யோ பொது காப்பீடு நிறுவனம் புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இப்கோ என்று அழைக்கப்படும் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனமும், ஜப்பானைச் சேர்ந்த டோக்யோ மரின் அண்ட் நிசிடோ பயர் நிறுவனமும் இணைந்து காப்பீடு நிறுவனத்தை சில மாதங்களுக்கு முன் துவக்கின. இதில் இப்கோவிற்கு 74 விழுக்காடு பங்கும், டோக்யோ மரின் நிறுவனத்திற்கு 26 விழுக்காடு பங்கும் உள்ளன.

இந்த காப்பீடு நிறுவனம் விபத்து ஏற்படும் போது மருத்துவ உதவி வழங்கும் வகையில், ஒருங்கினைந்த மருத்துவ காப்பீடு திட்டத்த அறிமுகப்படுத்தி உள்ளது.

இநத காப்பீடு திட்டத்தில் சேருபவர்களுக்கு, ஏதேனும் விபத்து ஏற்பட்டால் மருத்துவம் பார்த்துக் கொள்ளும் செலவை காப்பீடு நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். இதில் காப்பீடு செய்து கொண்டவர், அவரின் மனைவி, இரண்டு குழந்தைகளின் மருத்துவ செலவை காப்பீடு நிறுவனம் ஏற்றுக் கொள்ளும்.

இந்த காப்பீடு திட்டத்தின் அறமுக விழாவில் விற்பனை பிரிவு இயக்குநர் என்,கே.கேடியா பேசுகையில், காப்பீடு செய்து கொண்டவர்களுக்கு விபத்து ஏற்படும் போது. மருத்துவ செலவுக்கு திண்டாடமால், சிகிச்சை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அறிமுகப்படுத்தி உள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மற்ற காப்பீடு நிறுவனங்களை விட, சிறந்த முறையில் சேவை செய்வதே எங்கள் நோக்கம் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 25 தடங்களில் புறநகர் ரயில் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பேஸ்புக் நிறுவனருக்கு மரண தண்டனை விதிக்க முயற்சியா? அதிர்ச்சி தகவல்

டிரம்ப் - புதின் முக்கிய பேச்சு.. முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்?

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

Show comments