Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஐந்து பாலங்கள் கட்ட நபார்டு நிதியுதவி

Webdunia
புதன், 3 டிசம்பர் 2008 (14:36 IST)
சென்ன ை : ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் உதவியுடன ், தமிழகத்தில் ஐந்து பாலங்கள் கட்ட நபார்டு வங்கி நிதி ஒதுக்கியுள்ளது.

ஐந்து பாலங்கள் கட்டுவதற்கான மொத்த செலவு ரூ.127.01 கோடி. இந்த பாலங்கள் கட்ட நபார்டு வங்கி, ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் ரூ.101.61 கோடி அளிக்கவுள்ளது.

இந்த நிதியத்தின் திட்ட ஒப்புதல் குழுக் கூட்டம் அண்மையில் நடந்தது. அப்போது தமிழகத்தில் ஐந்து பாலங்கள் கட்ட நிதி ஒதுக்குவதென முடிவு செய்யப்பட்டது.

இதன் படி தஞ்சாவூர ், கடலூர ், நாமக்கல ், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கட்டப்படவுள்ள, இந்தப் பாலங்கள் மூலம் 109 கிராமங்களுக்கு சாலை இணைப்பு கிடைக்கும். சுமார் மூன்றரை லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.

தமிழகத்திற்க ு 2008-09 நிதி ஆண்டில் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் வாயிலாக ரூ.905.42 கோடி நபார்டு வங்கி அளித்துள்ளது. இதுவரை தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிதி ரூ.6243.77 கோடியை எட்டியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments