Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறு, குறுந் தொழில் நிறுவனங்களுக்கு கடன்

Webdunia
புதன், 3 டிசம்பர் 2008 (11:54 IST)
கோவ ை: சிற ு, குறுந் தொழில் நிறுவனங்களுக்கு சொத்து பிணையின்றி காப்புறுதிக் கடன் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வெ.பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரச ு, இந்தி ய சிறு தொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) இணைந்து சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்களுக்கான கடன் காப்புறுதி நிதி குழுமத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் துவக்கின.

சிற ு, குறுந் தொழில் நிறுவனங்களுக்கு, இந்த குழுமம் சார்பில் ரூ.50 லட்சம் வரை சொத்து பிணையம் இல்லாமலும ், மூன்றாவது நபர் உத்தரவாதம் இன்றியும் கடன் வழங்கப்படுகிறது.

இத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கடன்களில் 75 விழுக்காடு வர ை, அதிகபட்சமாக ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் வரை காப்புறுதி அளிக்கப்படுகிறது.

இந்த காப்புறுதித் திட்டத்தின்கீழ் கடன் பெற விரும்பும் தொழில் நிறுவனங்கள ், தாங்கள் பெற விரும்பும் கடன் தொகையில் 1.5 விழுக்காடு காப்புறுதி கட்டணமாக ஒரு முறையும ், 0.75 விழுக்காடு ஆண்டு சேவை கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்திருக்கும் குறுந்தொழில் நிறுவனங்கள ், மகளிர் தொழில்முனைவோர்கள் தாங்கள் பெற விரும்பும் கடன்தொகையில் 1 விழுக்காடு காப்புறுதி கட்டணமாகவும், அரை விழுக்காடு சேவை கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

இது குறித்து கூடுதல் விவரம் அறிய பொதுத்துற ை, தனியார் வங்கிகள ், தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டல ஊரக வங்கிகள ், தேசிய சிறு தொழில் கழகம ், இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களை தொடர்புகொள்ளலாம் என்று ஆட்சியர் வெ.பழனிக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments