Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் ஏற்றுமதி பாதிப்பு

Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2008 (16:41 IST)
புது டெல்ல ி: பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்தியாவின் ஏற்றுமதி 12.1% குறைந்துள்ளது.

அதே நேரத்தில் இறக்குமதி 10.6% அதிகரித்துள்ளது.

இந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் இருந்து 12.82 பில்லியன் டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடம் அக்டோபருடன் ஒப்பிடுகையில் 12.1 விழுக்காடு குறைவு.
( சென்ற அக்டோபர் ஏற்றுமதி 14.58 பில்லியன் டாலர்).

அதே நேரத்தில் அக்டோபர் மாதத்தில் 23.36 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது சென்ற வருடம் அக்டோபருடன் ஒப்பிடுகையில் 10.6 விழுக்காடு அதிகம்.

( சென்ற அக்டோபர் இறக்குமதி 23.36 பில்லியன் டாலர்).

ஏற்றுமதி குறைந்துள்ளதால், பல ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக ஜவுளி, கைவினை பொருட்கள் தயாரிப்பு, வைரம் பட்டை தீட்டுதல், நகை உற்பத்தி போன்ற தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இவை அதிக அளவு வேலை வாய்ப்பை வழங்கி வந்தன. தற்போது லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments